புதன், 5 பிப்ரவரி, 2020

தமிழக அரசு அசுர வேகத்தில் ஒரு உத்திரபிரதேசமாக, மாறிக்கொண்டிருக்கிறது.

Don Ashok -Ashok.R : சில விஷயங்களில் பிரச்சினையின் தீவிரம் தமக்கு க்கே வழிகாட்டியாய் இருந்த தமிழக அரசு அசுர வேகத்தில் ஒரு உத்திரபிரதேசமாக, குஜராத்தாக மாறிக்கொண்டிருக்கிறது. எடப்பாடி, ஓ.பி.எஸ், செங்கோட்டையன் கூட்டணி, துரோகத்தை ஒரு இறைச்சேவையைப் போல ரசித்து, மனமுவந்து செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஏற்பட்டாலேயொழிய சிலருக்குப் புரியாது. நீட், 5ம்,8ம் வகுப்பு பொதுத் தேர்வெல்லாம் அப்படித்தான். லவ்பேர்ட்ஸ் வளர்த்தவர்களுக்குத் தெரியும். பருந்தோ, கழுகோ வந்து கூண்டின் மேல் உட்கார்ந்தால் பதட்டத்தில், பயத்தில் சிறிய பறவைகளான லவ் பேர்ட்ஸுக்கு மாரடைப்பு ஏற்படக்கூடும். இப்படித்தான் குழந்தைகளுக்கான பொதுத் தேர்வை மனோதத்துவ நிபுணர்கள் பார்க்கிறார்கள். உடல் முழுக்க சாடிச வெறி ஊறிப்போன அரசினால்தான் இப்படி ஒரு செயலைச் செய்ய முடியும்.
இவர்கள் மட்டுமல்ல இப்போதைய தமிழக அமைச்சரவைக்கு ஒரு ரெஸ்யூம் தயாரித்தால் அதில் field of interest எனும் இடத்தில் தாராளமாக 'துரோகம்' எனப் போடலாம். அவ்வளவு கலைநயத்துடன் தமிழகமும், அதன் கல்வியும், உட்கட்டமைப்பும், வரலாறும் கூட பேரழிவுக்கு உள்ளாக்கப்படுகிறது. ஆட்சிமாற்றம் என்பது திமுக பலன்பெறக் கூடியது என்ற நிலை எல்லாம் எப்போதோ மாறிவிட்டது. இன்றைய நிலையில் திமுக ஆட்சிக்கு வருவது ஒன்றுதான் தமிழகத்தைக் காப்பாற்றக் கூடிய ஒன்று.

அது நடந்துவிடக்கூடாது என்றுதான் ஒட்டுமொத்த சங்கிக் கூட்டமும் முழுநேரமாக வேலை செய்கிறது. யார் யாரையோ தலைமை என முன்னிறுத்துகிறது. ஊடகங்களும் சதாசர்வ காலமும் அரசும், அரசுக்குத் துணைபோகிறவர்களையும் கேள்விக்குள்ளாக்காமல் எதிர்கட்சி பற்றிய விவாதங்களில் மூழ்கித் திளைக்கிறது. ஆனால் பாஜகவை எதிரியாகக் கருதும் ஆட்களுக்குக் கூட பாஜக தன் எதிரியாகக் கருதுவது திமுகவைதான் என்கிற உண்மை புரிவதில்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.
கட்டற்ற சர்வாதிகாரம், எல்லையற்ற பணம், ஊடகம், ஃபாசிசம், பொய்ப் பிரச்சாரம், முற்போக்கு முகமூடிகளைப் போடுக்கொண்டு முதுகில் குத்தக் காத்து நிற்கும் ஈட்டிகள் என அத்தனையையும் தாண்டித்தான் திமுக தேர்தல் வெற்றிகளைப் பெறவேண்டும், பெறுகிறது, பெறப் போகிறது.
ஆங்கிலத்தில், "Leave no stones unturned" என்பார்கள். அதாவது வெற்றி என்பது கட்டாயம் பெற்றே ஆகவேண்டும் என்கிற நிலையில் திமுக தலைவர் முழு வேகத்தோடு அதற்கான அத்தனை வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். அவர் நினைத்திருந்தால் வெகு சுலபமாக பாஜகவுக்கு சமிஞ்சை காட்டி அதிமுக ஆட்சியைக் கவிழ்த்திருக்கலாம். முதல்வர் ஆகியிருக்கலாம். மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கலாம். ஆனால் பாஜகவோடு எந்த சமரசத்திற்கும் அவர் தயாரில்லை என்கிற நிலையில் வெற்றிக்கான மற்ற அத்தனை விஷயங்களையும் செய்துகொண்டிருக்கிறார். இதையே எடப்பாடி செய்திருந்தால், "ஸ்டாலின் கனவுக்கு முட்டுக்கட்டை போட்ட எடப்பாடி" "எடப்பாடி அதிரடி வியூகம்" என்றெல்லாம் கொஞ்சம்கூட வெட்கமே இல்லாமல் செய்தி போட்டிருப்பார்கள். ஆனால் செய்தது ஸ்டாலின் அல்லவா! எதிரிகளின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.
நமக்கு ஒரு ஆயுதம் தேவையில்லை என்றாலும் அது எதிரியின் கையில் கிடைக்காமல் பார்த்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம். IPAC ஒப்பந்தத்தையும் அப்படித்தான் பார்க்கிறேன். தமிழகத்தில் உறுதியாக சூரியன் உதிக்கப்போகிறது. ஆந்தைகள் இறுதியாக கொஞ்சம் அலறிக்கொள்ளட்டும்.
-டான் அசோக்,
பிப்ரவரி 4, 2020

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக