சனி, 15 பிப்ரவரி, 2020

கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறந்த சிறுவன்.. ஆவடியில் திறந்த நிலையில் கிடந்த தொட்டி

sumuganns7.tv : ஆவடியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது காணாமல் போன 6 வயது சிறுவன் இறந்த நிலையில் கழிவு நீர் தொட்டியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
sewageசென்னை, ஆவடி காந்திநகர் அன்பழகன் தெருவை சேர்ந்தவர் காந்தி வள்ளி தம்பதியரின் 6 வயது குழந்தை சுமூகன். மாலை 5 மணியளவில் தெருவில் தனது அக்காவுடன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என ஆவடி காவல் நிலையத்தில் இரவு 9 மணிக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஆவடி உதவி ஆணையர் சத்தியமூர்த்தி தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சிறுவன் கடத்தப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமா? என்ற சந்தேகத்தில் தேடி வந்த நிலையில், காந்தி நகர் பகுதியில் உள்ள அன்பழகன் நகர் அதனை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள cctv காட்சிகளை சுமார் 2 மணிநேரம் ஆய்வுசெய்த காவல்துறையினர்,

சிசிடிவி காட்சிகளில் எந்தவிதமான தகவல்களும் கிடைக்காததால், தனிப்படையினர் குழந்தையின் வீட்டின் அருகே சென்று ஆய்வு செய்தனர்.
அங்கு சுமார் 12 வீடுகளின் பின்புறம் சென்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், அங்கு எந்த வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாத கழிவு நீர் தொட்டியில் உடைப்பு இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு நடத்திய சோதனையில் குழந்தை சுமூகன் மிதப்பதை கண்டுபிடித்தனர்.
மூடப்படாமல் இருந்த கழிவுநீர் குழி:

இதனையடுத்து, உடனடியாக கழிவுநீர் அகற்றும் வாகனம் வரவழைக்கப்பட்டு தொட்டியில் உள்ள கழிவுநீரை வெளியே எடுத்தனர். குழந்தையை ஏப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற இடத்தில் தனிப்படை காவல்துறையினர் கழிவுநீர் தொட்டியில் இறங்கி குழந்தையை மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்:
boy-dead-body
ஆனால் குழந்தை குழிக்குள் விழுந்து பலமணி நேரம் ஆனதால், குழந்தை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. பின்னர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை இறந்ததற்கான காரணம் அந்த பகுதியில் சுமார் 12 வீடுகளுக்கு மேல் வாடகை வசூலிக்கும் வீட்டின் உரிமையாளர் கழிவுநீர் தொட்டியை முறையாக பராமரிக்காமல், கழிவுநீர் தொட்டியில் மூடிகள் உடைந்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அங்கங்கு சேதமடைந்து இருக்கும் கழிவுநீர் குழிகள்:
open-sewage
கழிவு நீர் தொட்டிகள் உடைந்து இருப்பது குறித்து, ஆவடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததே சிறுவனின் மரணத்திற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக