சனி, 8 பிப்ரவரி, 2020

மதிமாறன் : ரஜினிகாந்தை பார்த்து திமுக அல்ல டி.ராஜேந்தர் கூட பயப்படமாட்டார்


jkநக்கீரன் : குடியுரிமை சட்ட விவகாரம் தொடர்பாக இந்தியா முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து இந்தியா முழுவதும் எதிர்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பு என்றால் நான் முதலில் குரல் கொடுப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எழுத்தாளர் வே. மதிமாறனிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின்அதிரடியான பதில்கள் வருமாறு,
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்ந்து நீங்கள் பேசி வருகிறீர்கள். அதற்கு எதிராக நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறீர்கள். குடியுரிமை சட்டத்திருத்தத்தை பற்றி ரஜினி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

இதனால் யாரும் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளார். அப்படி முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் நானே அவர்களுக்காக போராடுவேன் என்று தெரிவித்துள்ளார். இவ்வளவு நாளாக கருத்து தெரிவிக்காமல் இருந்த ரஜினிகாந்த தற்போது இதுதொடர்பாக பேசியுள்ளார். இதை பற்றிய உங்களின் கருத்து என்ன?


சிஏஏ சட்டம் தொடர்பாக தற்போதுதான் பேசியுள்ளார். ஆனால் பாஜகவை ஆதரித்து இதற்கு முன்னரே பேசியுள்ளார். அவர் இந்த சட்டத்தை பற்றி முன்னரே பேசியிருந்தால் கூட இதைத்தான் அவர் பேசுவார் என்பது நாம் எதிர்பார்த்தது தான். இஸ்லாமிய மக்கள் தேவையில்லாமல் பயப்படுகிறார்கள் என்று மோடி சொல்வதை போல் அவர் சொல்கிறார். உண்மையிலேயே முஸ்லிம் மக்கள் மோடி பயப்பட தேவையில்லை என்று கூறிய பிறகுதான் அதுகுறித்த அச்சமே, அவர்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் ஏற்கனவே இதுமாதிரி பலமுறை அவர்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். முத்தலாக் விவகாரத்தில் ஏமாற்றப்பட்டார்கள், காஷ்மீர் விவகாரத்தில் ஏமாற்றப்பட்டார்கள், இதே போன்று பல முறை அவர்கள் ஏமாற்றப்பட்டதால் மத்திய அரசோ, மோடியோ பயப்படாதீர்கள் என்றால் அவர்களுக்கு இயல்பாகவே பயம் வந்துவிடுகிறது. முத்தலாக் விவகாரத்தில் பெண்கள் பாதிக்கப்படுவதாக கூறிய மோடி அரசு, பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை பற்றி இதுவரை வாய்திறக்கவில்லை. பெண்கள் மீதி அக்கறை இருந்தால் இந்த  33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்திவிட்டு முத்தலாக் பற்றி பேசியிருந்தால் கூட அதை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடியும். இந்துக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றி ஒரு மோசமான அபிப்ராயம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இத்தகைய செயல்களை மத்திய அரசு செய்கிறது.

தற்போது இந்த சிஏஏ விவகாரத்தில் ரஜினிகாந்த் பேசியதை பற்றி கேட்கிறீர்கள். நான் இரண்டு ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். அவர் பிஜேபி கட்சியில் தான் இருக்கிறார். அதற்காகத்தான் தொடர்ந்து பேசி வருகிறார். இதை நான் பல்வேறு பேட்டிகளில், தொலைக்காட்சி விவாதங்களில் தொடர்ந்து கூறி வருகிறேன். தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் நடைபெற்றது போன்ற வன்முறை தில்லியில் போராடும் மாணவர்களின் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. மாணவர்களின் மண்டை உடைக்கப்பட்டது. காவல்துறையினர் என்ற போர்வையில் இந்து ஆதரவு சக்திகள் மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதற்கெல்லாம் ரஜினிகாந்த் குரல் கொடுத்தாரா? முஸ்லிம் மக்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் உடனடியாக குரல் கொடுப்பேன் என்று இன்றைக்கு சொல்கின்ற ரஜினி அன்றைக்கு ஏன் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. குஜராத்தில் மிகப்பெரிய வன்முறை நடத்தப்பட்டது. கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து கொடூர கொலை நடத்தப்பட்டது. அமெரிக்காவே மோடிக்கு விசா தர மறுத்தது. அப்போதெல்லாம் ரஜினிகாந்த் எங்கே சென்றார். இதெல்லாம் அவருக்கு தெரியாதா? அப்போது அவர் சுயநினைவு இல்லாமல் இருந்தாரா? சில நாட்களுக்கு முன்பு பல்கலைக் கழகங்களில் புகுந்து மாணவர்கள் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தினார்கள். அதற்கெல்லாம் ரஜினி கண்டம் தெரிவித்தாரா, இல்லை அதுகுறித்து பேசினாரா என்றால் அதுகுறித்து அவர் மறந்தும் கூட வாய் திறக்கவில்லை.


தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசாமல் காவல்துறைக்கு ஆதரவாக பேசியவர் ரஜினிகாந்த. இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிராக இருந்தால் முதல் ஆளாக பேசுவேன் என்று கூறுகிறாரே, அப்படி என்ன பேசுவார் என்றால் மோடி செய்தது சரி என்றுதான் பேசுவார். அதைத்தவிர மக்களுக்கு ஆதராவாக எதையும் அவர் பேசப் போவதில்லை. நன்றாக கவனித்தீர்கள் என்றால், ரஜினி நான் முதலில் குரல் கொடுப்பேன் என்றுதான் கூறியிருக்கிறார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. எனவே அரசு ஆதரவாக மக்களுக்கு எதிராக அவர் கண்டிப்பாக குரல் கொடுப்பார். இஸ்லாமியர்களுக்கு எதிராக எத்தனை வன்முறைகள் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடந்துள்ளது. அதற்கெல்லாம் இவர் குரல் கொடுத்தாரா? மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று ஒரு முஸ்லிம் சகோதரர் அடித்தே கொல்லப்பட்டார். அவதற்கு எதிராக இவர் குரல் கொடுத்தாரா? குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் இஸ்லாமியர்களின் வீடு புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று தில்லியில் நடந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் பேசினார்கள். அதை கண்டித்து அவர் இதுவரை ஏதாவது பேசினாரா அல்லது அறிக்கை ஏதேனும் விட்டாரா என்றால் அதுகுறித்த அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் இன்றைக்கு வாய்கிழிய முஸ்லிம் மக்களுக்கு தான் காவலன் போன்று பேசுகிறார். அவரின் பொய் பேச்சை யாரும் நம்ப போவதில்லை. அவரின் எண்ணம் எல்லாம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நினைப்புத்தான் அதிகம் இருக்கிறது. அவர் திமுகவுக்கு போட்டி என்று சிலர் ஊடகங்களில் தொடர்ந்து கூறி வருகிறார்கள், ஆனால் அவர் டி.ராஜேந்திரருக்கு கூட போட்டியாக இருக்க மாட்டார் என்பதே உண்மை.


உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்






தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடைபெற்ற இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசாமல் காவல்துறைக்கு ஆதரவாக பேசியவர் ரஜினிகாந்த. இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிராக இருந்தால் முதல் ஆளாக பேசுவேன் என்று கூறுகிறாரே, அப்படி என்ன பேசுவார் என்றால் மோடி செய்தது சரி என்றுதான் பேசுவார். அதைத்தவிர மக்களுக்கு ஆதராவாக எதையும் அவர் பேசப் போவதில்லை. நன்றாக கவனித்தீர்கள் என்றால், ரஜினி நான் முதலில் குரல் கொடுப்பேன் என்றுதான் கூறியிருக்கிறார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன் என்று அவர் ஒருபோதும் சொல்லவில்லை. எனவே அரசு ஆதரவாக மக்களுக்கு எதிராக அவர் கண்டிப்பாக குரல் கொடுப்பார். இஸ்லாமியர்களுக்கு எதிராக எத்தனை வன்முறைகள் இந்தியாவில் கடந்த சில மாதங்களாக நடந்துள்ளது. அதற்கெல்லாம் இவர் குரல் கொடுத்தாரா? மாட்டுக்கறி வைத்திருந்தார் என்று ஒரு முஸ்லிம் சகோதரர் அடித்தே கொல்லப்பட்டார். அவதற்கு எதிராக இவர் குரல் கொடுத்தாரா? குடியுரிமை சட்டத்தை எதிர்த்தால் இஸ்லாமியர்களின் வீடு புகுந்து தாக்குதல் நடத்துவோம் என்று தில்லியில் நடந்த கூட்டத்தில் பாஜக தலைவர்கள் பேசினார்கள். அதை கண்டித்து அவர் இதுவரை ஏதாவது பேசினாரா அல்லது அறிக்கை ஏதேனும் விட்டாரா என்றால் அதுகுறித்த அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் இன்றைக்கு வாய்கிழிய முஸ்லிம் மக்களுக்கு தான் காவலன் போன்று பேசுகிறார். அவரின் பொய் பேச்சை யாரும் நம்ப போவதில்லை. அவரின் எண்ணம் எல்லாம் தமிழகத்தை ஆள வேண்டும் என்ற நினைப்புத்தான் அதிகம் இருக்கிறது. அவர் திமுகவுக்கு போட்டி என்று சிலர் ஊடகங்களில் தொடர்ந்து கூறி வருகிறார்கள், ஆனால் அவர் டி.ராஜேந்திரருக்கு கூட போட்டியாக இருக்க மாட்டார் என்பதே உண்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக