சனி, 8 பிப்ரவரி, 2020

மிஸ்டர் கழுகு: ரஜினிக்கு டிக்... விஜய்க்கு செக்!

; விஜய் வீட்டில் ரெய்டு நடந்தபோது...விஜய் - ரஜினிvikatan - கார்த்திகேயன் மேடி - சு.குமரேசன் - என்.ஜி.மணிகண்டன் - கே.ஜெரோம் - வி.ஶ்ரீனிவாசுலு 2021... பி.ஜே.பி ஆட்டம் ஆரம்பம் ‘‘ஜனரஞ்சகமாகத் தொடங்கிய ஜனவரி, பிகில் கிளப்பும் பிப்ரவரி... என 2020 அமர்க்களமாகப் போகிறதே!’’ என்று பரபரப்பான ‘இன்ட்ரோ’வுடன் சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். இளநீர்ப் பாயசத்தைப் பருகக் கொடுத்தோம். ரசித்து ருசித்த கழுகார், ‘‘வருமானவரித் துறை பலருக்கும் பாயசம் ஊற்றிக் கொண்டிருப்பதால், எனக்கும் பாயசம் அளித்தீரோ?’’ என்ற கிண்டலுடன் செய்திக்குள் தாவினார். ">விஜய் வீட்டில் ரெய்டு நடந்தபோது...
‘‘உம்மிடம் நாங்கள் எதிர்பார்க்கும் பாயசம் என்னவென்று உமக்குத் தெரியாதா?’’
‘‘சினிமா ஃபைனான்ஷியர், கோபுரம் ஃபிலிம்ஸ் உரிமையாளர், சினிமா விநியோகஸ்தர் என்று பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான அன்புச்செழியனின் மதுரை அலுவலகம், வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரித் துறை ரெய்டு, சினிமா உலகையும் தாண்டி அரசியல் அரங்கிலும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பிப்ரவரி 5-ம் தேதி, மதுரை தெற்குமாசி வீதியில் உள்ள அவருடைய தலைமை அலுவலகம், காமராஜர் சாலையில் உள்ள அவரின் நண்பர் சரவணனின் வீடு, கீரைத்துறையில் உள்ள வீடு ஆகிய இடங்களில் சென்னையிலிருந்து வந்த ஐ.டி டீம் ரெய்டு நடத்தியது. அவரது சென்னை தி.நகர் வீடும் சோதனையிலிருந்து தப்பவில்லை.’’
‘‘அ.தி.மு.க அமைச்சர்களுக்கும் அவர் நெருக்கமானவர்தானே?’’



‘‘அதுமட்டுமல்ல... மதுரை மாநகர அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி பொறுப்பிலும் அவர் இருக்கிறார். துணை முதல்வர் ஓ.பி.எஸ், அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நெருக்கமான வராக அறியப்படுபவர். ‘தென்மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று முக்கிய அமைச்சர்களின் பணத்தை, திரைத்துறையில் அன்புச்செழியன் முதலீடு செய்திருக்கிறார். தனக்கு கிடைக்கும் வட்டியில் அவர்களுக்கு மாதாமாதம் பங்குத்தொகை தருகிறார்’ என்றெல்லாம் பேச்சுகள் உண்டு. இந்தத் தகவலின் அடிப்படையில்தான் வருமானவரித் துறை சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் வட்டத்தில் கூறுகின்றனர். அமைச்சர்களுக்கு எதிராக அன்புவிடம் இருந்து வாக்குமூலம் பெறவும் வருமானவரித் துறை முயற்சி செய்வதாகவும் வெளியாகியிருக்கும் தகவல்தான், ஆளுங்கட்சி வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.’’




ரஜினி - விஜய்




ரஜினி - விஜய்
‘‘ஏன் இந்தத் திடீர் ரெய்டு?’’
‘‘ரஜினிதான் காரணம் என்கின்றனர். `தர்பார்’ படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக சில விநியோகஸ்தர்கள் தரப்பில் போர்க்கொடி உயர்த்தப்பட்டது. ரஜினியை நேரில் சந்தித்து நஷ்டஈடு பெறவும் முடிவெடுக்கப்பட்டது. மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த விநியோகஸ்தர்களைத் தூண்டிவிட்டதே, அவர்களுக்கு ஃபைனான்ஸ் செய்த அன்புச்செழியன்தான் என்று கூறப்படுகிறது.’’
‘‘ஓஹோ...’’
‘‘இதுகுறித்து பிரபல ஆடிட்டரிடம் ரஜினி விவாதித்ததாகவும் கூறப்படு கிறது. ரஜினிக்குத் தெம்பூட்டிய அந்த ஆடிட்டர், டெல்லிக்கும் தகவலை பாஸ் செய்துவிட்டாராம். இதன் பிறகே ரஜினியைச் சீண்டிய அன்புமீது வருமானவரித் துறை பாய்ந்ததாம். சமீபத்தில் ரஜினியின் பெரியார் பற்றிய பேச்சுக்கு
ஓ.பி.எஸ், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கடுமையாக எதிர்வினை ஆற்றியிருந்தனர். `அப்படிப் பேசக் கூடாது’ என்று அவர்களுக்கும் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாம்.’’
‘‘அடேங்கப்பா... ரஜினிக்காக ஏன் இவ்வளவு தூரம் பா.ஜ.க இறங்கிவருகிறது?’’




ஏ.ஜி.எஸ் நிறுவன பங்குதாரர் கல்பாத்தி அகோரம் வீடு - அன்புச்செழியனின் சென்னை அலுவலகம்




ஏ.ஜி.எஸ் நிறுவன பங்குதாரர் கல்பாத்தி அகோரம் வீடு - அன்புச்செழியனின் சென்னை அலுவலகம்
‘‘வேறென்ன... எல்லாம் எலெக்‌ஷனுக்கான கூட்டணிக் கணக்குதான். ரஜினி மீதிருந்த வருமானவரி வழக்குகளை எல்லாம் பைசல் செய்துவிட்டனர். அதற்கு பிரதி உபகாரமாகத்தான், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ரஜினி ஆதரவு தெரிவித்திருக் கிறார். வழக்கமாக, ரஜினியின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் பிரதமர் மோடி. இந்த முறை பிரதமர் வாழ்த்து தெரிவிக்காதபோதே சுதாரித்து இறங்கி வந்துவிட்டாராம் ரஜினி. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் ரஜினியுடன் கைகோக்க விரும்பும் பா.ஜ.க, சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுக்கவும் திட்ட மிட்டிருக்கிறது. அ.தி.மு.க, தி.மு.க-வுக்குப் பணம் வரக்கூடிய வழிகளையும் அடைத்து வருகிறார்கள். இதன் ஒரு பகுதிதான் அன்புச்செழியனின் வீட்டில் நடந்த ரெய்டு.’’
‘‘நடிகர் விஜய் மீதும் ரெய்டு பாய்ந்துள்ளதே?’’




மிஸ்டர் கழுகு: ரஜினிக்கு டிக்... விஜய்க்கு செக்!
‘‘அதற்கு இரண்டு பிரதான காரணங்களைச் சொல்கின்றனர். ஒன்று, ‘பிகில்’ படத்தின் வருவாய்க்கு, சரியான வரியைக் கட்டவில்லை. அன்புச்செழியனின் இடங்களில் ரெய்டு நடைபெற்றபோதே, நடிகர் விஜய்யை வைத்து ‘பிகில்’ படத்தை எடுத்த ஏ.ஜி.எஸ் சினிமா நிறுவனம் தொடர்புடைய 22 இடங்களிலும் வருமானவரித் துறை சோதனை மேற்கொண்டது. இந்த நிறுவனத்தின் தி.நகர் அலுவலகத்தில் சோதனையிட்டபோது, ‘பிகில்’ படத்துக்காகச் செலவழிக்கப்பட்ட தொகையின் கணக்கு விவரங்கள் சிக்கினவாம். இதன் அடிப்படையில் தான், நடிகர் விஜய் விசாரிக்கப்பட்டதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.’’
‘‘ஓஹோ... இரண்டாவது காரணம்?’’
“இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜேப்பியார் கல்வி நிறுவனங்களில் நடந்த வருமானவரித் துறை சோதனையின்போது, நடிகர் விஜய் சம்பந்தப்பட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றன. விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை, அவரின் உறவினர் ஜான் பிரிட்டோ என்பவர்தான் முதலில் தயாரித்தார். தற்போது அவர் மாற்றப்பட்டு லலித் என்பவர் தயாரிக்கிறார். பெயருக்கு அவர் தயாரிப்பாளர் என்றாலும், பணம் முழுவதும் நடிகர் விஜய்யுடையது எனக் கூறப்படுகிறது. தொடக்கத்தில் இருந்தே விஜய்யின் நடவடிக்கையைக் கண்காணித்த வருமானவரித் துறையினர், ‘மாஸ்டர்’ பட வியாபாரம் பெரிய அளவில் நடந்துள்ளதை அறிந்து ரெய்டு நடத்தியதாகவும் தகவல் வருகிறது. ஆனால், இந்த ரெய்டு பின்னணியில் அரசியல் காரணங்களும் அடுக்கப்படுகின்றன.’’
‘‘முதலில் அதைச் சொல்லும்!’’
‘‘தமிழ்த் திரையுலகில் உச்ச மார்க்கெட்டில் இருப்பவர் விஜய். தனக்கென்று பெரும்ரசிகர் கூட்டத்தையே கட்டமைத்து வைத்திருப்பவர். இதைவைத்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் திட்டமிடுகிறார். விஜய்க்கும் உள்ளுக்குள் அந்த ஆசை இருந்தாலும், இப்போதைக்கு வேண்டாம் என நினைக்கிறாராம். எஸ்.ஏ.சந்திரசேகரின் அரசியல் ஸ்டன்ட்களை உன்னிப்பாகக் கவனிக்கும் டெல்லி மேலிடம், ரஜினிக்குப் போட்டியாக விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்துவிட்டால், தங்கள் மொத்தத் திட்டமும் தவிடுபொடி ஆகிவிடும் என்று ‘ஜெர்க்’கானதாகச் சொல்கிறார்கள்.’’




அன்புச்செழியனின் மதுரை அலுவலகம் - ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம்




அன்புச்செழியனின் மதுரை அலுவலகம் - ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம்
‘‘ஓஹோ!’’
‘‘இதற்கு ஏற்றாற்போல், சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் வெற்றிபெற்றுள்ளனர். சமீபத்தில்கூட சேலத்தில் ஒரு வெற்றிவிழா கொண்டாடப் பட்டது. இதைப் பற்றியும் உளவுத்துறை அதிகாரிகள், டெல்லிக்கு ‘நோட்’ அனுப்பியுள்ளனர். இதன் தொடர்ச்சியாகத் தான் நடிகர் விஜய்க்கு ‘செக்’ வைப்பதற்காக வருமானவரித் துறை பாய்ந்ததாகக் கூறப்படுகிறது.’’




உள்ளாட்சித் தேர்தலில் வென்ற விஜய் மக்கள் மன்றத்தினர்




உள்ளாட்சித் தேர்தலில் வென்ற விஜய் மக்கள் மன்றத்தினர்
‘‘ரஜினிக்கு ‘டிக்’... விஜய்க்கு ‘செக்’கா?’’
‘‘அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் பெண் மக்கள் பிரதிநிதி ஒருவரை வருமானவரித் துறை குறிவைத்திருக்கிறதாம். அவருடைய குடும்பத்தினருக்கு நடிகர் விஜய்யுடன் நெருக்கமான தொடர்பு உண்டு. அவருடைய வீட்டில் விஜய்க்கு சொந்தமான சில ஆவணங்கள் இருப்பதையும் வருமான வரித் துறையினர் மோப்பம்பிடித்திருக்கிறார்களாம். சென்னையில் உள்ள அவரது வீட்டில் விரைவில் சோதனை நடக்க இருக்கிறதாம்.’’
‘‘ஆனால், இப்போது நடந்த ரெய்டில் விஜய் வீட்டிலிருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என வருமானவரித் துறை விளக்கமளித்திருக்கிறதே?’’
‘‘ஆமாம். தயாரிப்பாளர், ஃபைனான்ஷியர் மற்றும் விநியோகஸ்தர்கள் தொடர்பான இடங்களில் மட்டும் கணக்கில் காட்டப்படாத 77 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமானவரித் துறையே விளக்கம் அளித்திருக்கிறது. விஜய்யின் சமீபத்திய படம் (பிகில்) 300 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக வந்த தகவலின்பேரில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டதாகவும் விளக்கமளித் திருக்கின்றனர்.’’
‘‘இதற்கு மட்டும் இவ்வளவு அவசரமாக வருமானவரித் துறை விளக்கம் கொடுத் திருப்பது ஏன்? கடந்த சில ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ரெய்டுகள் நடந்திருக் கின்றன. எதைப் பற்றியுமே பெரிதாக எந்த விளக்கத்தையும் வருமானவரித் துறை கொடுத்ததே இல்லையே!’’
‘‘உண்மைதான். கடந்த சில நாள்களாக சமூக ஊடகங்களில் இதுதான் ‘ஹாட் டாபிக்’காக இருக்கிறது. எடப்பாடி மற்றும் ஓ.பி.எஸ்-க்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி அலுவலகங்களில் மூன்று வருடங்களுக்கு முன் சோதனை நடத்தி கணக்கில் வராத பல சொத்துகளையும் ரொக்கத்தையும் கைப்பற்றினார்கள். அவரது திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர்மீது தொடரப் பட்ட வழக்குகள் ரத்துசெய்யப் பட்டன. அதையடுத்து சேகர் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தானத்தில் புதிய பதவி வழங்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக