ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீனப் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி

மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீனப் பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறிமாலைமலர் : மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீன பயணி லுவிஜினுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்ததால் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை:/> சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
கொடிய நோயாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் இது வரை 304 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அந்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்ற நாடுகளுக்கு பரவாமல் தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக அனைத்து நாடுகளிலும் உஷார் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர நிலையையும் பிரகடனம் செய்தது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சுகாதார மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். காய்ச்சல், சளி தொல்லை ஆகியவையே கொரோனா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்கிற தகவலும் பரவி இருப்பதால் அது போன்ற உடல்நல கோளாறுடன் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகிறார்கள்.
சென்னை விமான நிலையத்தில் 24 மணி நேரமும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

iv>
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12.40 மணி அளவில் மலேசியாவில் இருந்து சென்னை வந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமான பயணிகள் அனைவரும் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களில் சீனாவை சேர்ந்த லுவிஜின் என்ற ஆண் பயணியும் இருந்தார். 46 வயதான இவர் சீனாவில் இருந்து ஹாங்காங் சென்றுள்ளார். அங்கிருந்து மலேசியா வழியாக சென்னைக்கு வந்தது தெரிய வந்தது.
சீனப் பயணி லுவிஜினுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு இருந்ததால், விமான நிலைய சுகாதார முகாமில் இருந்த பணியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி சுகாதார துறையின் உயர்அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக சீனப் பயணியை தனிமைப்படுத்த உத்தரவிட்டனர்.
இதன்படி சீன பயணி லுவிஜின், சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கொரோனா வைரஸ் தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சீனாவில் உள்ள இந்தியர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு பாதுகாப்பு கருதி டெல்லிக்கு அழைத்து வந்தது. இவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் சீன பயணி ஒருவர் சென்னைக்கு கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வந்திருப்பது, சுகாதாரத்துறையினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சீனப் பயணிக்கு இன்று காலையில் காய்ச்சல் குறைந்திருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் 48 மணி நேரம் கழித்தே அவர் சகஜமான நிலையில் இருக்கிறாரா? என்பதை தெரியப்படுத்த முடியும் என்றும் அவர்கள் கூறினார்கள்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் பணி புரியும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் முக கவசம் அணிந்த நிலையிலேயே பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சீனப் பயணியை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக