ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

தர்பார் படு தோல்வி ... ரஜினிக்கு சம்பளம் 108 கோடியாம் .. பணத்தை திருப்பி கொடுன்னு பஞ்சாயத்து ..

தர்பார் படத்தில் நடிகர் ரஜினிக்கு சம்பளம் 108 கோடியாம்!
டைரடக்கரு முருகதாசுக்கு  முப்பத்தைந்து கோடியாம்  .
தமிழ்நாடு 62  கோடி மினிமம் காரண்டிக்கு  வித்தாங்களாம்.
கலெக்ட் பண்ணது 30 கோடியாம் .
அட்டர் ஃபிளாப்.
இப்ப பணத்தைத் திருப்பிக்குடுன்னு பஞ்சாயத்து.
ரைட்.
தொழில் தர்மப்படி எம் ஜி ( மினிமம் கேரண்டி) முறையில் படத்தை வாங்கினால்..எம் ஜி தொகையை விட அதிகம் போனால்..உபரித்தொகையை தயாரிப்பாளருக்குத் தர வேண்டும்.
ஆனால்..எம்ஜி தொகையை விடக் கீழே போனால்..நட்டத்தை விநியோகஸ்தர்கள் தான் ஏற்க வேண்டும்.
எம் ஜி யை விட அதிகம் ஈட்டி..எப்போதும் எவரும் லாபத்தைத் தயாரிப்பாளருக்குத் தந்தில்லை.
ஆனால் நஷ்டம் அடைந்தால்..நடிகரிடம் பணம் கேட்பது...அயோக்கியத்தனம்.
இதிலிருந்து பல விஷயங்கள் புலனாகும்.
1. அந்த நடிகரின் மார்க்கெட் மரண அடி வாங்கியுள்ளது.

2. அடுத்த படங்களை அந்தத் தயாரிப்பு நிறுவனமே ரிலீஸ் செய்து மறுநாளே அமேசானில் போடலாம்.
3. இது போன்ற மொக்க கமர்சியல் படங்களை இனி நாய் கூடப் பார்க்காது.
4. த.நாவில். ஒரு பத்து டிஸ்டிரிப்யூட்டர்..நாசமாயிட்டான்.
5. டிஸ்டிரிப்யுட்டர் மாதிரி தா அந்த ஸ்டாரை நம்பறவனும்...நடுத்தெருவுக்கு வருவான். நம்பகமான முகநூல் தகவல் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக