புதன், 5 பிப்ரவரி, 2020

லண்டனில் 9 கோடி சம்பளம்... ஆபீஸ் கேண்டினில் திருடிய வட இந்தியர்


Velmurugan P -/tamil.oneindia.com/  -  லண்டனில் ஆபிஸ் கேண்டினில் சாப்பாடு திருடியதாக உயர்ந்த பதவியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சிட்டி குரூப் வங்கி அதிகாரி பரஸ் ஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உயர்ந்த பதவியில் அந்தஸ்தில் இருக்கும் சிலருக்கு சில்லண்டி தனமாக ஸ்பூனை திருடுவது, சிறிய சிறிய பொருட்களை திருடுவது என மோசமான பழக்கம் இருக்கும். அப்படி தான் இந்தியாவைச் சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு ஆபிஸ் கேண்டினில் உணவை திருடும் கேவலமான பழக்கம் இருந்திருக்கிறது.
 பரஸ் ஷா வயது 31. இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் சிட்டி குரூப் வஙகியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும ஆப்பிரிக்கா பிரிவின் வர்த்தகத்தை தலைமை பொறுப்பை இருந்து கவனித்து வருகிறார். ஆண்டுக்கு 9.2 கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்
பரஸ் ஷா கடந்த 2017ம் ஆண்டு சிட்டி குரூப்பில் சேர்ந்துள்ளார்.. அதற்கு முன்பு ஹெச்எஸ்பிசி வங்கியில் 7 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். இவர் லண்டனில் உள்ள அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். சமீபத்தில் தான் இவருக்கு உயர்ந்த பதவி, கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் பரஸ் ஷா, அங்கு அலுவலகத்தில் உள்ள கேண்டினில் உணவை திருடி சாப்பிட்டுக்கிறார்.

இதை கண்டுபிடித்த சிட்டி குரூப் நிர்வாகம் அவரை உடனடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஆனால் கேண்டினில் எத்தனை முறை திருடி சாப்பிட்டார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இதனிடையே பரஸ் ஷா குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சிட்டி குரூப் இதுவரை பதில் அளிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக