செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

டெல்லி ஆம் ஆத்மி 62.. பஜக 8 .. காங்கிரஸ் 0 ! மூன்றாவது முறையும் ஆட்சி அமைக்கும் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி - அரவிந்த் கெஜ்ரிவால் பெருமிதம்மாலைமலர் : டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வெற்றியை தொடர்ந்து தொண்டர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், இது டெல்லி மக்களுக்கு கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர இதையடுத்து கட்சி அலுவலகம் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடம் உற்சாகமாக பேசினார். அப்போது அவர் பேசியதாவதுஇந்த தேர்தல் முடிவு மூலம் புது மாதிரியான அரசியல் பிறக்க வழி கிடைத்துள்ளது. இது புதிய அறிகுறி.
அனைவருக்கும், ஒரு தெளிவான செய்தியை டெல்லி அனுப்பியுள்ளது. வளர்ச்சிக்காக டெல்லி மக்கள் ஓட்டளித்துள்ளனர். இந்த வெற்றி டெல்லி மக்களின் வெற்றி. இது டெல்லியின் வெற்றி மட்டுமல்ல, இந்தியாவின் வெற்றியும்கூட. டெல்லி மக்கள் சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளனர். மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்று உள்ளோம். கடவுள் அனுமன் நம்மை ஆசிர்வதித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பானதாக அமைய வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக