ஞாயிறு, 2 பிப்ரவரி, 2020

5 மாத கர்ப்பிணி மகள் மீது.. ஆசிட் ஊற்றிய போலீஸ் தந்தை.

 Hemavandhana - tamil.oneindia.com :    திருவள்ளூர்: "நான் கர்ப்பமா இருக்கேன்..ன்னு
சொன்னேன். என் வயித்துலயே என் அப்பா எட்டி
எட்டி உதைச்சாரு.. கொலை பண்ணிடுவேன்னு சொல்லி மிரட்டினாரு" என்று காதல் திருமணம் செய்த பெண் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு டன்லப் நகரை சேர்ந்த தம்பதி பாலாஜி - பாக்கியலட்சுமி... இவர்களது மகன் சாய்குமார்.. 24 வயதாகிறது.. ஏசி மெக்கானிக்காக சென்னையில் வேலை பார்க்கிறார். இவர் தங்கியிருந்த வீட்டின் அருகே தீபிகா என்ற பெண்ணை காதலித்தார்.. தீபிகாவின் அப்பா விருப்ப ஓய்வு பெற்ற ஏட்டு பாலகுமார் ஆவார்.. 6 வருடமாக தீபிகாவும் - சாய்குமாரும் காதலித்து வருகிறார்கள்.
விஷயம் வீட்டுக்கு தெரிந்தது.. மகளை கண்டித்தும் கேட்கவில்லை.. எதிர்ப்பு அதிகமாக கிளம்பவும் தீபிகா - சாய்குமார் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய் கடந்த ஜுன் மாதம், பெங்களூரில் கல்யாணம் செய்து கொண்டனர்.. இப்போது தீபிகா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
பெங்களூரில் இருந்து வேப்பம்பட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு மனைவியை அழைத்து வந்தார் சாய்குமார். அப்போது விஷயம் அறிந்த தீபிகாவின் தந்தை ஏட்டு, 4 பேரை கூட்டிவந்து மகள் முகத்தில் ஆசிட்டை ஊற்றினார்.


அதை தடுக்க வந்த மாமியார் உட்பட2 பெண்கள் மீதும் ஆசிட் ஊற்றினார்.. பின்னர் மகளை காரில் செல்லவும், இதுகுறித்து மாமியார் வீட்டில் போலீசில் தகவல் சொன்னார்கள்.. அதனால் பயந்துபோன ஏட்டு, நடுவழியில் மகளை இறக்கிவிட்டு தப்பி விட்டார். இப்போது தீபிகா உட்பட 3 பேருமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையின்போது, போலீசாரிடம் தீபிகா நடந்த விவரத்தை கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக பேசி வீடியோவும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் சொன்னதாவது: வீடியோ வீடியோ "என் பேரு தீபிகா.. என் கணவர் பெயர் சாய்குமார்.. நான் லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.. அது என் ஃபேமிலிக்கு புடிக்கல.. கல்யாணம் பண்ணினதுல இருந்து என் அப்பா என்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டே இருந்தாரு.. காலைல என் மாமியார் வீட்டுக்கு வந்தார்.. அடியாளுங்களை நாலஞ்சு பேர் கூட்டிட்டு வந்தார்.. நல்லா பேசிற மாதிரியே என்கிட்டே பேசினார்.. திடீர்னு மயக்க மருந்து என் முகத்துல அடிச்சு.. என்னை கடத்திட்டு போய் ஸ்ரீபெரும்புதூரில் வெச்சு.. என்னை அடிச்சாரு.

நான் இப்போ கர்ப்பமா இருக்கேன்.. என் வயித்துலயே எட்டி எட்டி உதைச்சு கொடுமைப்படுத்தினாரு.. கொலை பண்ணிடுவேன்னு மிரட்டினாரு.. என் அம்மாவுக்கு சீரியஸ்ன்னு சொல்லி கூப்பிட்டு போனாங்க.. அதுக்கப்பறம் என் மாமியார் குடும்பம் போலீசில் புகார் தந்ததால இந்த விஷயம் தெரிஞ்சு என்னை மெயின் ரோட்டில் இறக்கி விட்டுட்டாரு.. " என்று கண்ணீர் மல்க பேசினார். இப்போது ஏட்டு பாலகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். Read more at: https://news/thiruvallur/pregnant-daughter-complaint-against-father-near-thiruvallur-375887.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக