ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

சென்னையில்300 கோடி ரூ மதிப்புள்ள 20,000 சதுர அடி நிலம் ஹரே கிருஷ்ணவுக்கு (ISKCON) தாரைவார்ப்பு ...

Krishnavel T S நேற்று முதல்வர் எடப்பாடியால் சென்னையில் கிரீம்ஸ் இஸ்கான் ( பழைய பெயர்: ஹரே ராமா ஹரே கிருஷ்ணா ) அமைப்புக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. (இந்த இயக்கம்தான் RSS இன் சர்வதேச ஏஜென்ட் என்பது பலருக்கு தெரிந்திருக்காது )
ரோட்டில் 20,000 சதுர அடி அரசு நிலம்
அங்கே அவர்கள் ஒரு சமையலறை கட்டி கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு இலவசமாக கொடுக்க போகிறார்கள். ( இஸ்கானில் வழங்கப்படும் உணவில் வெங்காயம் , பூண்டு எதுவும் கண்டிப்பாக சேர்க்கப்படாது)
இதற்காக முதல்கட்டமாக கவர்னர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்
முதலமைச்சர் மேலும் ஒரு 35 ஆயிரம் சதுர அடி உள்ள இடத்தை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்
மாணவர்களுக்கு காலை உணவு கொடுப்பது நல்ல விஷயம் தான்
அதை ஏன் இஸ்கான் மூலம் கொடுக்க வேண்டும்
அதற்கு ஏன் இத்தனை prime property நிலங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்
ஏற்கனவே இருக்கும் சத்துணவுத் திட்டத்தின் கட்டமைப்பை பயன்படுத்தி அந்தந்த பள்ளிகளிலேயே கொடுத்து விடலாம்.

பின்குறிப்பு: க்ரீம்ஸ் ரோடில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.30 கோடி 20,000 சதுர அடி என்பது சுமார் 10 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி
பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.20 கோடி 35,000 சதுர அடி என்பது சுமார் 15 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி


கபிலன் காமராஜ் : ISKCON என்ற இந்துத்துவ அமைப்பின் தலைமையிடம் இருப்பது அமெரிக்கா. அங்க உட்கார்ந்துகிட்டு மேற்கத்திய மக்களிடம் மதமாற்றம் செய்யும் கூட்டம் தான் ISKCON.
மேற்கத்திய நாடுகளில் பள்ளிகளில் குழந்தைகளுக்கு மாட்டுக்கறி, பன்றிக்கறி, காய்கறி என அனைத்தையும் மதியஉணவாக கொடுத்து திடகாத்திரமான சந்ததிகளை வளர்க்கிறார்கள்.
அங்கே போய் “குழந்தைகளுக்கு மாமிசம் கொடுக்காதீர்கள்” என ISKCON பேசமாட்டார்கள்.
இங்கே இந்தியா போன்ற வளரும் நாட்டில், கோடிக்கணக்கான மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழும் நிலை. இந்த சூழலிலும் பள்ளியில் குழந்தைகளுக்கு மதியஉணவில் வாரம் 5முட்டைகள் கொடுத்து ஆரோக்கியமாக வளர்க்கும் தமிழ்நாடு.
அருகே கர்நாடகத்தில் மதியஉணவை வழங்க ஒப்பந்தம் செய்திருக்கும் ISKCON அங்கே உணவில் பூண்டு வெங்காயம் சேர்க்காததால் குழந்தைகள் உணவை உண்பதில்லை என்ற குற்றசாட்டு இன்னமும் தீர்க்கப்படவில்லை.
அதற்குள் அடிமை அதிமுக அரசு தமிழகத்தில் அதே ISKCON அமைப்பிற்கு பள்ளியில் காலை உணவை வழங்க ஒப்பந்தம் கொடுக்கிறது. அவன் அதே ‘சுத்த சைவம்‘ என பூண்டு வெங்காயம் சேர்க்காத ‘அவாள்’ உணவை நம் குழந்தைகளிடம் திணிக்கிறார்கள்.
5 மற்றும் 8ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு பொது தேர்வை எதிர்த்தது போல இதையும் எதிர்க்க வேண்டும்.
இல்லையேல் இந்த அயோக்கியர்கள் அனைத்தையும் நாசம் செய்து நம் குழந்தைகளின் ஊட்டச்சத்தை சீர்கெடுத்துவிடுவார்கள்.


 Ragu நேற்று சென்னையில் கிரீம்ஸ் ரோட்டில் 20,000 சதுர அடி உள்ள இடம் இஸ்கான் அமைப்புக்கு தாரைவார்க்கப்பட்டது

அங்கே அவர்கள் ஒரு சமையலறை கட்டி கார்ப்பரேஷன் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு இலவசமாக கொடுக்க போகிறார்கள்

இதற்காக முதல்கட்டமாக கவர்னர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்

முதலமைச்சர் மேலும் ஒரு 35 ஆயிரம் சதுர அடி உள்ள இடத்தை பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்

மாணவர்களுக்கு காலை உணவு கொடுப்பது நல்ல விஷயம் தான்

அதை ஏன் இஸ்கான் மூலம் கொடுக்க வேண்டும்

அதற்கு ஏன் இத்தனை prime property நிலங்களை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்

ஏற்கனவே இருக்கும் சத்துணவுத் திட்டத்தின் கட்டமைப்பை பயன்படுத்தி அந்தந்த பள்ளிகளிலேயே கொடுத்து விடலாமே

க்ரீம்ஸ் ரோடில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.30 கோடி 20,000 சதுர அடி என்பது சுமார் 10 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி

பெரம்பூர் பேரக்ஸ் பகுதியில் நிலத்தின் மதிப்பு 1 கிரவுண்ட் ரூ.20 கோடி 35,000 சதுர அடி என்பது சுமார் 15 கிரவுண்ட் மதிப்பு 300 கோடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக