வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

நாடேடிகள் 2.. வன்மங்களை கடந்து திரைவரை வந்து கண்களை கலங்கவைக்கும்

Thangaraj Gandhi : நாடேடிகள் 2 விமர்சனம் செய்யாமல் கடக்க முடியாது.
படம் முழுக்க பெரியார். அம்பேத்கர்.
சாதி மறுப்பு
இதை ஒடுக்கப்பட்ட நாங்கள் பேசிடலாம. ஏனென்றால் இரத்தமும் வலியும் உயிரும் என இழந்தது இரண்டாயிரம் ஆண்டுகள்.
ஆனால்,
இப்படத்தில் முக்குலத்து சமூகமே ஒன்று கூடி தங்களது கதா பாத்திரத்தை‌ ஏற்றுக்கொண்டு சாதிக்கு எதிராக சாதியற்றோராக இணையலாம் என‌ ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்திருப்பதைக் காணும் போது சூரியனைப் போல பூர்வக்குடிகளாய் ஜொலிக்கிறார்கள்.
முன்பு ஒருமுறை, படையாட்சி ராமதாஸ் மருத்துவர் அவர்கள் அருந்ததிய உள்இட ஒதுக்கீடுக்கு குரல் கொடுத்தார்.
உள்ளபடியே, ஆதித்தமிழர் பேரவையின்
அருந்ததியர் அரசியல் எழுச்சி மாநாட்டில் கொங்கு ஈஸ்வரன் பங்கேற்று கவுண்டர்களும் சாதிக்கு அப்பாற்பட்டவர்கள் என தன்னை முன்னத்தியாய் முன்னிருத்தினார்.
ஆக, தமிழர்கள் நாம் இணைவதில் மனத்தளவில் அளவில் உருத்தாக உள்ளோம்.

ஆனால் வடக்கிருந்து வரும் இந்துத்துவவாதிகளும் அவர்களிடம் விலை போன நம்பவர் சிலரும் நாம் எப்போதெல்லாம் இறுக பற்றுகிறோமோ அப்போதெல்லாம் உள்நுழைந்து சிதைக்கிறார்கள்.
இவ்வளவு வன்மத்தையும் கடந்து நடோடிகள்2 திரைவரை வந்து இன்று தியேட்டர்களில் எல்லோர் கண்களையும் கலங்க வைத்து சாதியை விட்டு நாம்.. நாமாவோம். என்கிறது.
படத்தின் கூடுதல் அம்சமாய் சீமானையும் கிழித்துள்ளார்‌ சமுத்திரக்கனி.
ஆம், படத்தின் நாயகன் முக்குலம்.
அவர் மணக்கும் போராளி‌ பெண் தெலுங்கு. ஆக, படத்தில் இனவாதமும்‌ சாதியவாதமும் நொறுங்கியுள்ளது.
தமிழர்களாய் தமிழாய் இணைவோம் என்கிறது.
இனி கவுண்டர் தேவர் வன்னியர் உள்ளிட்ட சாதிகளில் அறிவால் சாதியை வெறுப்பார் உள்ளார்கள் என்ற கடைசி நம்பிக்கையை ஊட்டி, தமிழை உயர்த்தியுள்ளனர்.
சங்கரனால்(சிவன்) உண்டான சாதி தியாகி.சங்கர்(உடுமலை)களால் நொறுங்குகிறது.
மொத்தத்தில், சமுத்திரக்கனி
சாதிய சமுத்திரத்தில் அவ்வை கை நெல்லிக்கனி.
என் கருத்து புத்தன் முருகனுக்கு சமர்ப்பணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக