திங்கள், 3 பிப்ரவரி, 2020

1-ம் வகுப்பு படித்த 6வயது சிறுமியை நாசமாக்கி கொலை செய்த சிறுவர்கள்.. வேடசந்தூர் அருகே

Mathivanan Maran -tamil.oneindia.com : வேடசந்தூர்: திண்டுக்கல் அருகே 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தனியார் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளி குடும்பத்துடன் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அவரது 6 வயது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார் வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி நீண்டநேரமாக காணவில்லை என்பதால் பெற்றோர் தேடி அலைந்தனர்.
அப்போது அதே பகுதியில் கிணறு ஒன்றில் சிறுமி சடலமாக கிடந்தார். இதனையடுத்து கூம்பூர் போலீசார் அங்கு வந்து சிறுமியின் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
பின்னர் சிறுமியின் உடல் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் கைது செய்யப்பட்ட 2 சிறுவர்களும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.



முன்னதாக திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பாக சிறுமியின் உறவினர்கள் மறியல் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் திண்டுக்கல்- திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே இச்சம்பவத்தில் உண்மை குற்றவாளியான உமாசங்கர் என்பவரை போலீஸ் பாதுகாக்க முயற்சிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் உமாசங்கரை கைது செய்ய வலியுறுத்தி திண்டுக்கல்- பழனி சாலையில் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக