வியாழன், 9 ஜனவரி, 2020

ஒதுங்கிப் போகும் டிரம்ப்.. அமைதிக்கு அவசர அழைப்பு.. உரசிப் பார்க்கும் ஈரான்!


ஈரான் எப்படி சுலைமானி மரணம் tamil.oneindia.com - shyamsundar : டெஹ்ரான்: அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அமைதிக்கு அழைப்பு விடுத்தும் இன்று ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.
இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை வலுத்துள்ளது. இந்த சண்டை கண்டிப்பாக மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.
>இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நேற்றைய பேட்டியில், போர் தொடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. ;போர் சில விஷயங்களுக்கு தீர்வாக அமையாது. அதனால் அதை நாங்கள் விரும்பவில்ல. ஈரானை தனிமைப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம்.




ஈரான் எப்படி

ஈரான் மீதான நடவடிக்கைகளை நாங்கள் நிர்வாக ரீதியாக மேற்கொள்வோம். ஆயுத ரீதியாக செய்ய மாட்டோம். ஈரான் மீது பொருளாதார தடைகளை விதிப்போம் . ஈரானை உலக நாடுகள் இணைந்து தனிமைப்படுத்த வேண்டும்.



அணு ஆயுதம்

ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பதை அனுமதிக்க முடியாது. தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும்., ஈரான் மீதான பொருளாதார தடைகள் தொடரும். அமெரிக்காவை மிரட்டும் போக்கை ஈரான் நிறுத்த வேண்டும், என்று டிரம்ப் கூறினார்.



ராக்கெட்ட தாக்குதல்

ஆனால் இதை ஈரான் பெரிய அளவில் காதில் போட்டுக்கொள்ளவில்லை. நேற்று டிரம்ப் பேச்சை தொடர்ந்து இன்று மீண்டும் ஈரான் ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது . ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது.



அமைதி முக்கியம்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதியை நிலைநாட்டும் வகையில் இப்படி பேசினார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ஈரான் அவர் பேசி சில மணி நேரங்களில் தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது. அதிலும் தாக்க கூடாது என்று அறிவிக்கட்ட கிரீன் ஃசோன் பகுதியில் ஈராக்கில் ஈரான் தாக்கியுள்ளது.



சுலைமானி மரணம்

சுலைமானி மரணம் ஈரானை அந்த அளவிற்கு அதிர்ச்சி அடைய, கோபம் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஈரான் போருக்கு தயார் ஆகிவிட்டது என்றும் கூறுகிறார்கள். ஈரானுக்கு நிறைய ஆதரவு இதில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக