ஞாயிறு, 26 ஜனவரி, 2020

இளையராஜாவும் பத்ம... ஜாதி விருதுகளும்

Muralidharan Pb : மீள் பதிவு. ரஹ்மான் விஸ்வநாதன் ஆனந்த், எம்எஸ்
சுப்புலட்சுமி போன்ற தமிழகர்கள் எல்லாம் சாதனைகள் செய்த போது நாங்கள் அவர்கள் எந்த சாதி என்று சாதிப் பார்க்கவில்லை. தமிழராக பார்த்தோம், பார்க்கிறோம், பார்ப்போம்.
இளையராஜா என்ற மாபெரும் இசை மேதையை கவுரவித்து அரசு விருது வழங்கும் போது, இவ்வளவு பெரிய நாளேடு தனது குரூர புத்தியை வெளிப்படுத்தி இருக்கு.
எத்தனை பெரிய மனசு? நீங்கள் பாரத ரத்னா கொடுத்து கவுரவிக்க படவேண்டிய கலைஞனுக்கு இப்போது தான் பத்ம விருது தந்துள்ளீர்கள். என்றைக்குமே எங்கள் இதய சிம்மாசனத்தில் அவர் பேரரசன். ராஜா சார், நீங்க எவ்வளவு உயர்ந்தாலும் தமிழன் உங்களை தமிழனாக கொண்டாடுகிறான்.
மற்றவர்கள் தலித் என்ற அடையாளத்தோடு தான் உங்களை காண்கிறார்கள். எங்கள் பேரரக்கன் கொடுத்த 'இசைஞானி' தான் என்றுமே நிலையானது மாறாதது. இசைஞானிக்கு புரிந்தால் சரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக