சனி, 18 ஜனவரி, 2020

அம்மாவின் கழுத்தை அறுத்தேன்.. துண்டு துண்டாக வெட்டினேன்.. பீச்சில் கொண்டு போய்.. வைத்த மகன்!

நண்பன் விர்ஜூ tamil.oneindia.com/thiruvananthapuram :  கோழிக்கோடு: அம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று ஃபேனில் தொங்க விட்டேன்.. இஸ்மாயிலை கத்தியால் குத்தி கொன்று, தலை, உடம்பு, கை, கால்களை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.. மொத்தமாக சடல குவியலை மூட்டை கட்டிக் கொண்டு பீச்சில் போட்டுவிட்டேன்" என்று தாய், நண்பனை கொன்ற நபர் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.
கோழிக்கோடு அருகே முக்கம் கிழக்கு மணாஞ்சேரியை சேர்ந்தவர் ஜெயவள்ளி.. ஏகப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரர்.
இவரது மகன் விர்ஜூ.. 53 வயதாகிறது.. அடிக்கடி தன் தாய் ஜெயவள்ளியை மிரட்டி சொத்துக்களை எழுதி வந்தார். ஒரு கட்டத்தில் சொத்துக்களை தர முடியாது என்று ஜெயவள்ளி கண்டிப்பாக சொல்லவும், அவரை கொல்ல முடிவு செய்தார் மகன்.
இந்த கொலையை செய்வதற்காக நண்பர் இஸ்மாயிலிடம் உதவி கேட்டார்.. அதற்கு இஸ்மாயில் 2 லட்சம் தந்தால் கொலை செய்வதாக தெரிவிக்கவும், அதற்கு விர்ஜு சம்மதம் சொன்னார். அதன்படி, கடந்த 2014-ம் வருடம், மார்ச் 5-ந் தேதி தூங்கி கொண்டு இருந்த ஜெயவள்ளியின் கழுத்தை விர்ஜூவும், இஸ்மாயிலும் சேர்ந்து நெரித்து கொன்றனர்.

நெரித்து கொலை நெரித்து கொலை அதன்பிறகு, சடலத்தை ஃபேனில் தொங்க விட்டு தற்கொலை என்று டிராமா செய்தனர். போலீசாரும் இது சம்பந்தமான விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2017-ல் அங்கிருந்த பீச்சில் இஸ்மாயில் பிணமாக கிடந்தார். தலை தனி, முண்டம் தனி, கை கால்கள் தனித்தனியாக விழுந்து கிடந்தன.. அவற்றை கைப்பற்றினாலும், இறந்தது யார் என்று போலீசாருக்கு அடையாளம் தெரியவில்லை

பழைய கிரிமினல்கள் ஃபைல்களை கொண்டு கைரேகை வைத்துதான், இப்படி கொடூரமாக கொல்லப்பட்டது இஸ்மாயில் என்று முடிவு செய்தனர். எவ்வளவோ முயன்றும், கொலையாளியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால் கியூ பிராஞ்ச் போலீசார் இதனை கையில் எடுத்தனர்..
நண்பர் விர்ஜூவிடமும் விசாரணை  ஆரம்பமானது.. ஆனால் அவர் திடுதிப்பென்று தலைமறைவாகவும் சந்தேகம் உறுதியானது.. இப்போது 2 வருட தேடலுக்கு பிறகு விர்ஜு  போலீசில் சிக்கி உள்ளார். அப்போது அவர் வாக்குமூலத்தில் சொன்னதாவது:

ரிவாள் "என் அம்மா கொல்ல இஸ்மாயிலிடம் உதவி கேட்டேன்.. ரூ. 2 லட்சம் கேட்டார்.. என்கிட்ட அவ்வளவு பணம் இல்லை.. பணம் தரும்படி ஓயாமல் தொல்லை செய்யவும்தான் இஸ்மாயிலையும் கொல்ல முடிவு செய்தேன்..

சம்பவத்தன்று வீட்டுக்கு வருமாறு சொன்னேன்... தண்ணி அடிக்கலாம் என்றதும் சரி என்றார்.. ஃபுல் போதையில் இஸ்மாயில் இருக்கும்போது, கத்தியால் குத்திவிட்டேன்.. பிறகு அரிவாளை வைத்து, தலை, உடலை தனித்தனியாக வெட்டி எடுத்தேன்.. ஒரு மூட்டையில் உடற்பாக குவியலை கட்டி எடுத்து, பீச் பக்கமாக போட்டு விட்டு வந்துவிட்டேன்" என்றார். இதையடுத்து விர்ஜு கைதாகி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக