திங்கள், 27 ஜனவரி, 2020

திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை- மகளின் காதலன் வெறிச்செயல்


மறியலில் ஈடுபட்ட பாஜகவினர்தினத்தந்தி :  திருச்சியில் இன்று பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி தொண்டர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியில் பாஜக பிரமுகர் படுகொலை- தொண்டர்கள் மறியல்.  திருச்சி பாலக்கரை மண்டல பாஜக செயலாளராக பதவி வகித்து வந்தவர் விஜயரகு. இவர் இன்று காலை காந்தி மார்க்கெட்டிற்கு சென்றபோது, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலை பாஜகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொண்டர்கள் பலர் மருத்துவமனை முன் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த மார்க்கெட்டில் நடந்த இந்த கொலை சம்பவம் திருச்சியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக