திங்கள், 27 ஜனவரி, 2020

ஆப்கானிஸ்தான்: பயணிகள் விமானம் நொறுங்கி விழுந்தது .. 83 பேர் நிலை ? தாலிபான் மீது சந்தேகம்?

ஆப்கானிஸ்தானில் விமான விபத்து.. தலிபான் கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்தது.. 83 பேரின் நிலை என்ன?
 காபூல்: ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தை சேர்ந்த 737-400 விமானம் ஆகும். ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து இன்று காலை அந்த விமானம் புறப்பட்டுள்ளது. காபூல் நோக்கி அந்த விமான சென்றுள்ளது

BBC : கிழக்கு ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு தென் மேற்கே உள்ள கஜ்னி மாகாணத்தின் டே யாக் மாவட்டத்தில் இந்த விபத்து நடந்ததாக அந்த மாகாணத்தை சேர்ந்த அரசு செய்தி தொடர்பாளர் ஒருவர் உள்ளூர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப கோளாறு தொடர்பான காரணங்களால் இந்த விமானம் தீப்பிடித்து, நொறுங்கி விழுந்ததாக அரசு செய்தி தொடர்பாளர் மேலும் கூறினார்.
இந்த பயணிகள் விமானம் ஆரியானா விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தது என்று தொடக்கத்தில் கூறப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் இதனை மறுத்துள்ளது.

''எங்களது நிறுவனத்தை சேர்ந்த விமானங்கள் திட்டமிடப்பட்ட இடங்களை சென்றடைந்துவிட்டன. அதனால் தற்போது நொறுங்கி விழுந்த விமானம் ஆரியானா விமான சேவை நிறுவனத்தை சேர்ந்தது அல்ல'' என்று அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் விமானப் போக்குவரத்து ஆணையமும் இப்படி எந்த ஒரு விமான விபத்தும் நடைபெற்றுள்ளதாக தங்களுக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளதால் இந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக