வெள்ளி, 17 ஜனவரி, 2020

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் ... சிதம்பரம் போன்றோர் தயங்கியது ஏன்?


Mohamed Rafi : ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளாரக அறிவிக்க தடை போட்டதே சிதம்பரம் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தான்.
அதை எல்லாம் மீறி திமுக தலைவர் ஸ்டாலின் தான் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தான் எங்களின் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தார். அதை ஆமோதிக்ககூட சிதம்பரம் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பலர் முன்வரவில்லை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கூட காங்கிரஸ் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலை சந்தித்து படுதோல்வியடைந்தது.
இந்த லட்சணத்தில் திமுக தலைவரை முதல்வராக விடாமல் திமுக மூத்த தலைவர்கள் செயல்படுகிறார்கள் என காங்கிரஸ் கட்சியின் சில அல்றசில்லறைகள் பேசிட்டு இருக்காங்க....
தமிழகத்தில் கிராமம், நகரம், படித்தவர் என எல்லா மட்டத்திலும் சிறியவர் முதல் பெரியவர்வரை தெரிந்த அரசியல் முகம் ஸ்டாலின். தமிழக மக்களுக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது நீண்ட நாட்களாக ஒரு சாப்ட்கார்னர் இருக்கிறது அது கண்டிப்பாக வரும் தேர்தலில் பெரிய வெற்றியை கொடுக்கும்.
எடப்பாடியின் அடிமைத்தனம் தமிழகம் அறிந்தது. அடுத்த தேர்தலில் அதிமுக மற்றும் பிற உதிரிக்கட்சிகளின் தொண்டர்களே திமுகவுக்கு மட்டுமே ஓட்டு போடுவார்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக