புதன், 29 ஜனவரி, 2020

அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பது உறுதி ?



தினகரன் :அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுவது குறித்தான முடிவுகளை எடுக்க, ஏற்கனவே,  5 அமைச்சர்கள் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டுமென்றால் தமிழகத்தின் இட ஒதுக்கீடு முறையில் பாதிப்பு ஏற்படாது என மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும் என தமிழக அரசு முடிவெடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு உறுதியளிக்கும் பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்படுமா? என 5 அமைச்சர்கள் அடங்கிய ஆய்வு செய்யவுள்ளது.>இந்த குழுவில் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், மின் அமைச்சர் தங்கமணி, சட்ட அமைச்சர் சிவி சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளது

குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், நேற்று 5 அமைச்சரைக் குழுவினர் தலைமைச் செயலருடன் ஆலோசனை செய்தனர்.  அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாகப் பிரிப்பதால் ஏற்படும் நிதி சிக்கலை தீர்க்க குழு அமைக்கவும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக