புதன், 29 ஜனவரி, 2020

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..!! : ஒபரேய் தேவன் 35வருடங்களுக்கு முன்னரே கூறியது!

என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்..!!  : ஒபரேய்  தேவன்  35வருடங்களுக்கு முன்னரே கூறியது!ஓபரோய் தேவன் என்கிற இராணுவ திறமைகள் நிரம்பிய போராளி.
Godfather படப்பாணியில் 1983 ஜூலை தாக்குதலுக்குபின் தனக்கு போட்டியாக வரக்கூடியவர்களை பிரபாகரன் (#செல்லக்கிளி அம்மான் உட்பட) குறுகிய காலத்துக்குள் கொன்றார்.
இன்று அவரின் சின்னத்தம்பி தயா(படம் 2) லண்டன் சீமையிலிருந்து அவரை நினைவுகூருகிறார்.
“என்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லை எமது தாய் மண் சுடுகாடாகி விடும்”….
புலிகளினால் August 14 ம் திகதி 1983 ம் ஆண்டு யாழ் நீராவியடியில் சுடப்பட்டு இறக்க முன்னர் 25 வயது நிரம்பிய ஒபரேய் (பறுவா) தேவன் கூறியது. நிறுத்தினார்களா இல்லையே… அந்தக் கூற்று இன்று எவ்வளவு நிதர்சனமாகியிருக்கின்றது. புலிகளினால் August 14 ம் திகதி 1983 ம் ஆண்டு யாழ் நீராவியடியில் சுடப்பட்டு இறக்க முன்னர் 25 வயது நிரம்பிய ஒபரேய் (பறுவா) தேவன் கூறியது. நிறுத்தினார்களா இல்லையே…
அந்தக் கூற்று இன்று எவ்வளவு நிதர்சனமாகியிருக்கின்றது. தமக்கு நிகராக மற்றொரு அமைப்பு வலுப்பெற்று விடும் என்ற குரூர எண்ணத்தினால் தனக்கு ஒரே மேசையில் பிள்ளை போல் உணவு பரிமாறிய தாயின் பிள்ளையை கொல்ல ஆட்களை அனுப்பியதை என்னவென்று சொல்ல…
; 70களின் பிற்பகுதி 80 களின் ஆரம்பத்தில் திருநெல்வேலியில் தலைமறைவுச் சந்திப்புக்கள் வழமையாக நடைபெறுகின்ற ஒரு நாள் புதிய புலிகள் என்ற அமைப்புக்குள் குழப்பமெழ அதிலிருந்து சிலர் விலக மனவேதனையில் தான் சாகப்போவதாக டெலோவின் தலைவர் தங்கத்துரை அவர்களிடம் பிரபாகரன் கூறியுள்ளார்.

அப்போது துப்பாக்கி ஒன்றை கொடுத்து தம்மோடு சில காலம் தங்கண்ணா வைத்திருந்த காலமும் உள்ளது.
முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்த ஒரே இயக்கத் தலைவர் ஸ்ரீசபாரட்டனம் ஆவர்.
ஒபரேய் தேவனையும் தனித்து இயங்காமல் ஒற்றுமை பலமாகும் ஒன்று சேர்ந்து ரெலோவுடன் சேர்வதற்கு கோரப்பட்டதாகவும் இந்திரா காந்தி அம்மையாரை சந்திக்க தேவனை இந்தியாவிற்கு ரெலோ அழைப்பு விடுத்திருந்த சமயம் இத் தகவல் சுதன் ரமேஷ் ஆகியோரால் புலிகளுக்கு கசிந்து.
ஸ்ரீசபாரட்னம் நாட்டில் இல்லாததனால் புலிகளினால் தேவனை கொல்லும் முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம். ஸ்ரீசபாரட்டனம் இருந்திருந்தால் அவர் தேவனுக்கு முன்னர் கொல்லப்பட்டிருப்பார்.
தான் கொண்ட லட்சியத்திற்காக தன்னை அழித்தற்காக பிரபாகரனை மதிக்கலாமே தவிர இந்தக் குரூர மனம் எப்படி வந்தது.
யாழ்ப்பாண சமூகத்தின் ஒரு அங்கம் தானே அவரும். எத்தனை தமிழ்த் தலைவர்கள் சகோதரர்கள் கொல்லப்பட்டனர். (ஒபரேய் தேவன், மனோ மாஸ்டர், பத்மநாபா, ஸ்ரீசபாரட்டனம், ஜெகன், கேதீஸ்வரன் லோகநாதன், அமிர்தலிங்கம் யோகேஸ்வரன், நீலன் திருச்செல்வம், அதிபர் ஆனந்தராஜா, நீதிபதி ஞானச்சந்திரன் என இந்தப் பட்டியல் நீளமானது….. சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற சிலர் கொலை முயற்ச்சியிலிருந்து தப்பினார்கள்).
பின்னாட்களில் நடந்த கொலைகள் மற்றய தளபதிகளின் முடிவாக இருந்திருக்கலாம் ஆனால் முள்ளிவாய்க்கல் அழிவுக்கு முன்னர் நாமே நம்மை கொன்றது தான் அதிகம்.
இங்கே மற்றய இயக்கங்கள் மாற்றுக் குறையாத் தங்கம் என்று சொல்ல வரவில்லை. ஆனால் புத்திஜீவிகள் உட்பட சக தமிழர்களை அதிகம் கொலை செய்தவர்கள் யார்?
நாட்டை விட்டு புத்திஜீவிகளை துரத்தியவர்கள் யார்? இயக்கத் தலைவர்களை சுட்டீர்கள் சரி அதன் கீழ் மட்ட உறுப்பினர்களை உயிரை காக்க இலங்கை அரசாங்கத்திடம் சரணடையவல்லவா துரத்தினீர்கள்.
இராணுவ ரீதியான வெற்றிகளை அரசியல் ரீதியாக மாற்ற முடியாத அரசியல் வங்குரோத்தே தமிழர்களின் இன்றய நிலைக்கு முதன்மை காரணியாக உள்ளது. சுடுவதனால் மட்டும் எவனும் வெற்றி பெற்று விடமுடியாது என்பது எமக்கு வரலாறு தந்துள்ள பாடம்.
ஒபரேய் தேவன் அவர்களின் இயக்கம் தமிழீழ விடுதலை இராணுவம் (TELA) வளர்ந்திருந்தாலும் புலிகள் போன்ற ஒரு இயக்கமாக இருந்திருக்கலாம்.
ஒபரேய் (பறுவா) தேவன் சுடப்பட்டு இறந்ததனை அறிந்தவுடன் அம்மாவுடன் ஒபரேய் தேவனின் தந்தை குலசேகரம் (அம்மாவின் தாய் மாமன்) அவர்களின் வீட்டுக்கு சென்று தேவனின் தாயாரின் கதறல்களை கேட்ட பின் உடல் எரிக்கப்பட்ட செம்மணி சுடலைக்கும் சென்றது 35 வருடங்களுக்கு முன்பான மறக்க முடியாத நாள் !!!!!
“Let my death be the last or you will turn our homeland into a cemetery” Oberoi Devan
முகப்புத்தகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற பதிவு… இது
Yogalingam KailasanathanTamil Tigress: The fake memoirs

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக