ஞாயிறு, 12 ஜனவரி, 2020

17 மாடி கட்டடம்.. 163 வீடுகள் தரைமட்டம்.. கொச்சியில் சரிந்த 4 விதிமீறல் கட்டடங்கள் வீடியோ

By Vishnupriya R  -  tamil.oneindia.com :   கொச்சி: கேரள மாநிலம், கொச்சியில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உச்சநீதிமன்ற அறிவுரைப்படி சில நொடிகளில் தரைமட்டமாக்கப்பட்டன. மற்றொரு கட்டடமான கோல்டன் காயலோரம் மதியம் 2 மணிக்கு இடிக்கப்பட்டது. கேரள மாநிலம், கொச்சியில் உள்ள மரடு பகுதியில் கடலோர ஒழுங்குமண்டல விதிகளை மீறி கட்டப்பட்ட 4 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்தாக கூறப்படுகிறது. இந்த குடியிருப்புகளில் மொத்தம் 343 வீடுகள் இருந்தன. நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஹெச் டூஓ ஹோலி பெய்த், ஆல்பா செரைன், ஜெயின் கோரல் கேவ், கோல்டன் காயலோரம் ஆகிய 4 அடுக்குமாடி குடியிருப்புகளும் வெடி வைத்து இடிக்குமாறு உத்தரவிட்டது. 
இதையடுத்து நேற்றைய தினம் ஹெச் டூஓ ஹோலி பெய்த், ஆல்பா செரைன் ஆகிய இரு குடியிருப்புகளை இடிக்கும் பணி நடைபெற்றன. இடிக்கும் பணிகளை தமிழகம் மற்றும் மும்பை நிறுவனங்களால் நவீன தொழில்நுட்பங்களுடன் செய்தது
இதற்காக அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே வெளியேற்றப்பட்டனர். அந்த குடியிருப்புகளில் உள்ளவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் வெளியேற்றப்பட்டனர். நேற்றைய தினம் காலை 8 மணிக்கு இந்த இரு கட்டடங்களும் தகர்க்கப்பட்டன. ஏற்பாடுகள் தீவிரம் ஏற்பாடுகள் தீவிரம் மொத்தம் 9 வினாடிகளில் முதல் கட்டடம் இடிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட இடைவெளியில் மற்றொரு கட்டடமும் இடிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மேலும் இரு குடியிருப்புகளை இடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கட்டடம் இடித்தவுடன் அப்படியே தரையோடு சரிந்து விழும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று காலை 11 மணி அளவில் குடியிருப்பை தகர்க்கும் பணிகள் தொடங்கின. சில நொடிகளில் ஜெயின் கோரல் கேவ் உள்ளிட்ட கட்டடங்கள் சில நொடிகளில் தகர்க்கப்பட்டன. கட்டடங்கள் இடிப்பதற்கு முன்னர் அபாய சங்கு ஒலிக்கப்பட்டன.


கட்டடம் இடிக்கப்பட்டவுடன் அதை சுற்றி 100 மீட்டருக்கு கரும்புகை காணப்பட்டது. இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் ரூ 50 லட்சம் முதல் ரூ 1.5 கோடி வரை விற்பனை செய்யப்பட்டதாக குடியிருப்புவாசிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இன்று மதியம் 2 மணிக்கு 4ஆவது கட்டடமான கோல்டன் காயலோரம் இடிக்கப்பட்டது. இந்த கட்டடங்களை தகர்க்க 350 கிலோவுக்கு மேற்பட்ட வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக