சனி, 18 ஜனவரி, 2020

ஷீரடி சாயி பாபா கோயில் மூடப்படுகிறது ? தாக்கரேயின் ரூ.100 கோடி அறிவிப்பு; கொந்தளித்த பக்தர்கள்!

உத்தவ் தாக்கரேஷீரடிராம் பிரசாத்- vikatan.com : தாக்கரேயின் ரூ.100 கோடி அறிவிப்பு; கொந்தளித்த பக்தர்கள்!- ஷீரடி சாய்பாபா விவகாரத்தில் என்ன நடந்தது? ஜனவரி 19-ம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையறையின்றி மூடுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது. மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரில் உள்ள `ஷீரடி’-யில் சாய்பாபா, தன் வாழ்நாளில் பெரும்பாலான காலத்தைக் கழித்தார். `ஷீரடி’யில் உள்ள ஒவ்வோர் அடி மண்ணும் சாய்பாபாவின் திருவடி
ஸ்பரிசத்தால் மகிமை பெற்றுத் திகழ்வதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு பாபாவுக்கு எனப் மிகப்பெரிய கோயில் உள்ளது.
சாய்பாபா வாழ்ந்து மறைந்த இடமான ஷீரடியில் பாபாவின் சமாதி மந்திர், அவர் வசித்த துவாரகாமயி, சாவடி, குருஸ்தான், லெண்டித் தோட்டம், மகல்சாபதி இல்லம் என்று பல இடங்களைப் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்தநிலையில்தான் ஜனவரி 19-ம் தேதி முதல் ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையறையின்றி மூடுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இது சாய்பாபா பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறிய சர்ச்சையான கருத்தைத் தொடர்ந்தே கோயில் மூடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. சாய்பாபா பிறந்த இடம் குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. பா்பனி மாவட்டம் `பத்ரி’ என்னுமிடத்தில் பிறந்தார் என்று சில பக்தர்கள் நம்புகின்றனர். `பத்ரி’ பகுதிக்கும் பக்தர்கள் சென்று வருகிறார்கள். ஷீரடி போன்று அங்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பக்தர்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, `சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பத்ரியில் இருக்கிறது' எனக் கூறியிருந்தார். பத்ரியில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார். அகமதாபாத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையின் முன்னாள் அறங்காவலர், கைலாஷ் பாபு கோட்டே கூறுகையில், `சாய்பாபா குறித்த தாக்கரேயின் கருத்தை உள்ளூர்வாசிகள் ரசிக்கவில்லை. சாய்பாபாவின் பிறப்பிடம் குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. சாய்பாபா ஷீரடியில் தங்கியிருந்தபோது பிறந்த இடம் குறித்தோ, மதம் குறித்தோ அவர் எதுவும் கூறவில்லை’ என்றார்.
உத்தவ் தாக்கரேயின் இந்த அறிவிப்பு எதிராக ஷீரடியில் உள்ள மக்கள் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. டிசம்பர் 19-ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகக் கூறப்பட்டது. re>

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக