தீக்கதிர் :
சென்னை, டிச.7- பெண்களுக்கான கொலைக்களமாக உத்தர பிரதேசம்
மாறிக்கொண்டிருக்கிறது என்று சென்னை விமானநிலையத்தில் ப.சிதம்பரம்
தெரிவித்தார். ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த
வழக்கில் தில்லியில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.
சிதம்பரம் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவ ரது முன்ஜாமீன்
மனுக்களை உச்சநீதி மன்றம் தொடர்ந்து நிராகரித்து வந்தால் 106 நாட்கள்
சிறையில் இருந்தார்.
நீதிமன்றம் பல்வேறு நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கியதையடுத்து, இம் மாதம் 4
ஆம் தேதி திகார் சிறையிலி ருந்து ப.சிதம்பரம் விடுதலை செய்யப் பட்டார்.
பிறகு, தில்லியிலுள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திற்கு சென்ற அவர் அங்கு
செய்தியாளர்களை சந்தித்ததார். அப்போது, நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான
நிலையில் இருக்கிறது.
பொரு ளாதார பிரச்சனை என்ன என்பதே பாஜக வினர் புரிந்து கொள்ளவில்லை. அதனால் பொருளாதார பிரச்சனைக்கு அவர்களால் தீர்வு தர முடியவில்லை. நோயை கண்ட றிந்தால்தான் மருந்து தர முடியும். என்ன நோய் இவர்கள் நோயையே கண்டறிய தவறி விட்டனர்.
இதனால் பொருளாதாரம் சீரழிந்துவிட்டது என்று அதிரடியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினார். இந்நிலையில், சனிக்கிழமை(டிச.7) சென்னைக்கு வந்த ப.சிதம்பரத்திற்கு சென்னை விமான நிலையத்தில் திரண்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் ஆரவாரத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த ப.சிதம்பரம்,“பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது. நாட்டின் பல பகுதிகளில் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. சுதந்திரக் குரல்கள் நெரிக்கப்படுகின்றன. என்னுடைய மன உறுதியை குலைக்க வேண்டும் என்பதற்காகவே சிறையில் அடைத்தனர். ஆனால் என்னுடைய மன உறுதியை குலைக்க முடியாது” என்றார். பாஜகவை எதிர்ப்பதில் தமிழக மக்களின் விழிப்புணர்வு நாடு முழுவதும் பரவ வேண்டும். தமிழக மக்கள் காட்டும் எச்சரிக்கையை அனைத்து மாநில மக்க ளும் காட்டினால் இந்தியா சுதந்திர நாடாக மாறும். ஒருவரின் சுதந்திரம் மறுக்கப் பட்டால் அனைவருக்கும் மறுக்கப்பட்ட தாகும். பெண்களுக்கான கொலைக்கள மாக உத்தரப்பிரதேசம் மாறிக்கொண்டி ருக்கிறது என்றும் சிதம்பரம் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக