வெள்ளி, 6 டிசம்பர், 2019

பாலியல் புகார் கொடுத்த சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்

Jabalpur: A 16-year-old girl was allegedly stabbed to death by a spurned lover in Madhya Pradesh's Jabalpur district, police said on Tuesday. The accused, Shivkumar Choudhary (24), has been arrested, Gohalpur police station's inspector Praveen Singh said. Choudhary had earlier professed his love for the girl, but she rejected his proposal, he said
பாலியல் துஸ்பிரயோக புகார் வழங்கிய சிறுமியை 30 முறை கத்தியால் குத்தி கொன்ற இளைஞன்  தினத்தந்தி  : மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகப்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு செய்து சிறைக்கு சென்ற நபர், பிணையில் வெளிவந்து குறித்த சிறுமியை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஐதராபாத்தில் கால்நடை வைத்தியர் பாலியல் துஸ்பியோகம் செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. பாலியல் குற்றவாளிகளை அடித்துக்கொல்ல வேண்டும் என்று சில பெண் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். இந்த நிலையில், பாலியல் வழக்கில் கைதானவர்களுக்கு பிணை வழங்குவது ஆபத்தாக மாறும் வகையில் மத்தியப்பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

 மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 16 வயது இளம் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக 19 வயதான சிவக்குமார் என்பவர் கைதானார். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்  பிணையில வெளிவந்த அவர், தான் சிறைக்கு செல்ல காரணமாக இருந்த பெண் மீது கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், பெண்ணின் நடவடிக்கையை தினமும் கண்காணித்த சிவக்குமார், பெண்ணின் பெற்றோர் வெளியே சென்ற நிலையில், வீட்டுக்குள்  புகுந்த அவர், அங்கு தனியாக இருந்த பெண்ணை கத்தியால் சரமாறியாக குத்தி கொலை செய்துள்ளார். அலறல் சப்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கே வர, அங்கிருந்து சிவக்குமார் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். எனினும், கத்தியுடன் இருந்த குறித்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பாலியல் துஸ்பிரயோக வழக்கில் கைதானவர்களுக்கு பிணை வழங்குவது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. > இதையடுத்து கொல்லப்பட்ட குறித்த  இளம் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்த வைத்தியர்கள் பெண்ணின் உடலில் 30 இடங்களில் கத்தி குத்து காயம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக