வெள்ளி, 15 நவம்பர், 2019

சீமானுக்கு பின்னே இருப்பது மாபா பாண்டியராஜன்.....?

பிள்ளைகளுக்கு தந்தை யார் மிஸ்டர் மாஃபா ?

தாம் சொல்லிய சொற்களை, சொல்லவில்லை என மறுப்பது, தாம் எடுத்த வாந்தியை தானே திரும்ப விழுங்குவது போன்று அருவருப்பானது. "நாய் தான் கக்கியதை தானே திங்குமாம்...'' என்பது ஒரு பிரபல சொலவடை. இப்போது மாஃபா பாண்டியராஜன் அந்த வேலையை தான் செய்து கொண்டிருக்கிறார்.
தி.மு.க தலைவர் தளபதி அவர்களை விமர்சிக்கிறேன் என தரம் தாழ்ந்து பேசி விட்டு, ஆப்பசைத்த "குரங்காய்" முழிக்கிறார் இப்போது. 'மிசாவில் கைதாகவில்லை ஸ்டாலின்' என அன்று சொல்லிவிட்டார், மண்டபத்தில் எவனோ எழுதிக் கொடுத்ததை நம்பி. அடுத்தக்கட்டமாக ஒரு படி மேலே போய், 'விரைவில் ஆதாரம் தருகிறேன்', என்றார். கழகத் தோழர்கள் அடுக்கடுக்காய் ஆதாரத்தைக் காட்டிவிட்டார்கள். இன்று பொய் சொல்லி மாட்டிக் கொண்டு, நான் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என உழப்புகிறார் மாஃபா.
அ.தி.மு.க அமைச்சர்களின் இமேஜை உயர்த்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் அமர்த்தப்பட்டுள்ளதாக பரவலாகத் தகவல். அந்த நிறுவனம் சொன்னதை கேட்டு தான், மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த பச்சிளம் குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற போராடுவதாக மண்ணை பூசிக் கொண்டு மருத்துவம் விஜய்பாஸ்கர் நான்கு நாட்கள் பேட்டிக் கொடுத்தது. அதே போல தான் எதை செய்தும் செல்லுபடியாக முடியாமல் தவிக்கும் மாஃபாவுக்கு இந்த ஆலோசனை கொடுக்கப்பட்டுள்ளது போலும். அதை நம்பி சேற்றில் சிக்கிக் கொண்டுள்ளார்.


மாஃபாவின் வரலாறே ஒரு "கலங்கிய சேற்றுக்குட்டை". போணியாகாத ஒரு கம்பெனி நடத்திக் கொண்டிருந்த காலத்தில், மயிலாப்பூர் குருக்கள் 'குருமூர்த்தியின்' சுதேசி ஜாக்ரன் இயக்கத்தில் இணைந்தார். அவரோடு ஏற்பட்ட நெருக்கத்தினை பயன்படுத்தி, பா.ஜ.கவில் இணைந்தார். அப்போதைய பிரதமர் வாஜ்பாயின் அமைச்சரவையில் சூப்பர் ஸ்டாராக இருந்த மத்திய அமைச்சர் பிரமோத் மகாஜன் அவர்களின் பராக்கிரமத்தை அறிந்த மாஃபா அவரை நெருங்கினார். அதற்கு அவர் படித்த எக்ஸ்.எல்.ஆர்.அய் நிறுவனப் பெயரும், ஆங்கிலமும் தான் அடிப்படை.
இவரது 'எம்ப்டி' நிறுவனங்களில் பிரமோத்தின் கரன்சி கத்தைகள் நிரப்பப்பட்டதாக அப்போது டெல்லி முழுக்க பேச்சு உண்டு. அந்த காலகட்டத்தில் பிரமோத் மகாஜன் தான் அடுத்த பிரதமர் என்ற பேச்சு வந்து விட்டது. 40,000 கோடி ரூபாய் பிரமோத் வசம் இருந்ததாகவும் பேச்சு. பா.ஜ.கவின் கவர்ச்சி முகம் அவர். அவரை ஏற்றுக் கொள்ளாதோர் எண்ணப்படி, பிரமோத்தின் தம்பியே அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல வைத்தனர். பிரமோத் மறைந்தார். பிரமோத்தின் கரன்சி கத்தைகள் அண்ணனுக்கு சொந்தமானது.

இப்போது ஆங்கிலத்தோடு, பணமும் சேர்ந்த உடன் அடுத்த மரத்தை தேடினார். மத்தியில் பா.ஜ.க ஆட்சி போய் காங்கிரஸ் ஆட்சி. புண்ணியமில்லை. தமிழகத்தில் விஜயகாந்த் கட்சி வளர்ச்சியாக தெரிந்தது. அங்கு "தாவினார்". எம்.பி சீட் வாங்கினார். தேறவில்லை. அடுத்து எம்.எல்.ஏவானார். சட்டசபையில் பட்ஜெட் மீது விவாதிக்கும் போது, புள்ளிவிபரங்களை விளக்கி பேசி பொருளாதார மேதை போல் தன்னைக் காட்டிக் கொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை விஜயகாந்த் நாக்கை துருத்தி மிரட்டிய பிறகு தே.மு.தி.கவை நொறுக்க ஜெ திட்டமிட்டார்.
அதை பயன்படுத்தி, தன்னை எம்.எல்.ஏவாக்கிய விஜயகாந்தை காட்டிக் கொடுத்து விட்டு அ.தி.மு.கவில் இணைந்தார் மாஃபா. இது தான் மாஃபா. சாப்பிட்டு முடித்து கழுவிய கை ஈரம் காய்வதற்குள், சோறு போட்ட கரங்களை துண்டாக்க தயாராகி விடுவார். நன்றி என்பது அவரது உடலில் கிஞ்சித்தும் கிடையாது. அதே போல தான் அவருக்கு விசுவாசம், நாகரிகம் போன்றவற்றுக்கு அர்த்தம் தெரியாது. அவருக்கு தெரிந்ததெல்லாம், " பணம், பணம், பணம்" தான்.

அடுத்து ஜெயலலிதா மறைந்து அவரது கல்லறை ஈரம் காய்வதற்குள்ளேயே, அ.தி.மு.கவுக்கு உள்ளேயே ஒரு சுற்று வந்தார். முதலில் சசிகலாவுக்கு விசுவாசியாகக் காட்டிக் கொண்டு, திவாகரனோடு ஒரிரு நாட்கள் சுற்றினார். சசியை சிறையிலடைத்தனர். அடுத்து தர்மயுத்தம் பன்னீர் பின்னால் சென்றார். அந்தக் கடையும் போணியாகவில்லை. பன்னீரையும், எடப்பாடியையும் பா.ஜ.க பஞ்சாயத்து செய்து சேர்த்து வைத்த நேரத்தில், தனது பழைய பா.ஜ.க மெம்பர்ஷிப் கார்டை காட்டி மந்திரி பதவியை பிடித்தார்.
எடப்பாடியே சினிமாவில் வரும் டபுள் கிராஸ் வில்லன்களை தாண்டிய கேரக்டர். பல கிராஸ்களை செய்த மாஃபாவின் தகிடுதத்தங்களை அறிந்த எடப்பாடி, அவரை மந்திரிசபையின் கடைசி நபராகத் தான் வைத்துள்ளார். எப்படியாவது "கனமான" துறையை பிடித்து விட வேண்டுமென துடிக்கும் மாஃபா 'தர்மயுத்தம்'பன்னீரை கைக்கழுவி விட்டு, எடப்பாடியின் விசுவாசியாக காட்டிக் கொண்டார். ஆனால், எடப்பாடி அசரவில்லை.
கீழடி ஆய்வுகளை, அந்தத் துறையின் அமைச்சர் என்ற முறையில் ஆர்.எஸ்.எஸ் உத்தரவுப்படி முடக்கப் பார்த்தார். தி.மு.க தலைவர் தளபதி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் எதிர்த்தனர். தமிழக மக்களும் எதிர்த்தனர். பணிந்தார். ஆனால் "இதை தமிழ் நாகரிகம் என்று சொல்லாதீர்கள், பாரத நாகரீகம் என்று சொல்லுங்கள்" , என்று பேசி, தான் ஒரு "ஒரிஜினல் ஆர்.எஸ்.எஸ்" என வெளிப்படுத்திக் கொண்டார். ஆனாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

"இலக்கை" அடைய என்ன வழி என்று ஆலோசித்திருக்கிறார். பாரதிய ஜனதாவின் மத்திய அரசை அஞ்சாமல், அயராமல் தொடர்ந்து எதிர்ப்பவர் தி.மு.க தலைவர் தளபதி தான். அவரை பர்சனலாக அட்டாக் செய்தால் தனக்கு "மைலேஜ்" கிடைக்கும் என திட்டமிட்டார். அதனால் தான், தேவையற்ற தருணத்தில், தேவையற்ற சொற்களை கொண்டு தி.மு.க தலைவர் தளபதியை தாக்கினார். தளபதி அவர்களை இடித்து பேச எந்தத் தேவையும் இல்லாமல் மாஃபா பேசியதற்கு காரணம், அது தனக்கு "பலம்" தரும் என்று நம்பி தான்.
அதுவரை கழகத்தில் ஒரு தொண்டராக இருந்த தளபதி அவர்களை முன்வரிசை தலைவராக்கியது, மிசா காலத்தில் அவர் சந்தித்த தாக்குதல்களும், நெருக்கடிகளும் தான். அவரது மிசா கால தியாகம் கழகத்தின் முன்னணி தலைவர்களாலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. மிசா சட்டத்தை கொண்டு வந்த மறைந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்களே தளபதி அவர்களின் "மனோதிடம்" கண்டு வியந்தவர். வரலாறு தெரியாத மாஃபா, இதை அறியாமல் கையிலெடுத்து மாட்டிக் கொண்டார்.
மாஃபாவுக்கு இந்த விவாகரத்தில், அவரது கட்சியான அ.தி.மு.கவிலேயே ஆதரவில்லை. காரணம் தளபதி அவர்களை தொட்டு, சுட்டுக் கொள்ள வேண்டாம் என்று மற்றவர்கள் எண்ணுவது தான். ரோட்டோர அமைச்சர் மட்டும் ஒரு பேட்டியின் போது பல்லைக் காட்டினார்.

மாஃபா பாண்டியராஜனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, கழகத் தோழர்கள் போராட்டக் களத்தில் குதித்தனர். தளபதி அவர்கள் தான் பெருந்தன்மையோடு, அத்தகைய போராட்டங்கள் வேண்டாம் என உத்தரவிட்டார். இன்னொரு புறம் கழகத் தோழர்கள் ஆதாரங்களை திரட்டினர். தகவல் தொழில்நுட்ப அணி எம்.எம்.அப்துல்லா ''இஸ்மாயில் கமிஷன் அறிக்கை''யையையும், நாடாளுமன்றத்தில் அன்றைய உள்துறை அமைச்சர் பிரம்மானந்த ரெட்டி தளபதி அவர்கள் மிசாவில் கைதானது குறித்து பேசியதையும், ஆதாரத்தோடு வெளியிட்டு தொலைக்காட்சியில் பேட்டி அளித்தார். முன்னாள் அமைச்சர் அண்ணன் எ.வ.வேலு அமெரிக்க தூதரக ஆதாரங்கள் இருப்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
மிசா என்றால் தளபதி அவர்கள் நினைவு தான் தமிழக மக்களுக்கு வரும். அதனால் தான் தளபதி அவர்கள், "மிசாவிலேயே நான் இல்லையாம். இதை அரசியல் அறியாதவர்கள் பேசலாம். ஆனால் இதை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விவாதிப்பது வேதனையாக இருக்கிறது. நான் மிசாவில் தான் கைது செய்யப்பட்டேன் என்று நானே சொல்லிக் கொள்ள நாணுகிறேன்", என்று தன் உளக்குமுறலை வெளிப்படுத்தினார்கள். தளபதி அவர்களுக்கு ஏற்படுத்திய மனக்காயத்திற்கு ஒரு காலத்தில் மாஃபா தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். தளபதி மன்னிக்கலாம். தொண்டர்கள் மன்னிக்க மாட்டார்கள்.
இவ்வளவுக்கும் பிறகு மாஃபா மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், " ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை. மிசாவின் போது போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்யாத ஸ்டாலின் எதற்காக கைதானார் என்றே கேட்டேன். மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கான விடையை அவர்கள் கொடுத்து விட்டனர். ஸ்டாலின் மிசா விவகாரத்தில் என் நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது. மன்னிப்பு கேட்க மாட்டேன்", என்று நேற்று பேட்டிக் கொடுத்திருக்கிறார் மாஃபா.
மாஃபா பாண்டியராஜன், தளபதி அவர்கள் மிசாவில் தான் கைது செய்யப்பட்டார் என்பதை ஒப்புக் கொள்கிறார். ஆனால், தனது பழைய குற்றச்சாட்டுகள் குறித்து வாய் திறக்கவில்லை. அது தான் சந்தேகத்தை தூண்டுகிறது. அவரது பொறாமையின் காரணமாக வெளிப்படுகிற சொற்களோ எனத் தோன்றுகிறது. இந்த வயதிலும், இத்தனை வருட உழைப்பிற்கும் பிறகு தளபதி அவர்கள் இளமையாக, கம்பீரமாக காட்சியளிக்கிறார். மாஃபா கதை வேறு.
மாஃபா பாண்டியராஜனை கூர்ந்து கவனித்தவர்களுக்கு ஒரு விஷயம் மனதில் பட்டிருக்கும். ஆம், அவரது உடல் மொழி - பாடி லாங்குவேஜ். அதில் ஓர் நளினம் இருக்கும், நாட்டியம் இருக்கும். தளபதி அவர்களிடம் காணப்படும் கம்பீரமோ, உறுதியோ இருக்காது. அவரவருக்கு இயற்கையாக வாய்த்தது. அந்த பொறாமை உணர்வால் தான் புலம்பித் திரிகிறாரோ எனத் தோன்றுகிறது.

இதென்ன பர்சனல் அட்டாக் எனத் தோன்றலாம். இது உளவியல் ரீதியாக பார்க்கப்பட்டுள்ள பார்வை. பர்சனல் அட்டாக் ஆக இருந்தாலும் உண்மை இது தான். இந்திய ஏகாதிபத்திய அரசை எதிர்க்கின்ற, ஒற்றை ஜனநாயகக் குரலாக ஒலிக்கின்ற தளபதி அவர்களை வீழ்த்த மாஃபா எடுக்கும் ஆயுதம் தான் அவர் மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தி.மு.கழக அரசு அமையும் நேரத்தில், அவருக்கான மருத்துவ உதவிகள் முறையாக செய்து தரப்படும்.
இறுதியாக. சொன்ன வார்த்தைகள், பெற்ற பிள்ளைகளை போல. யாரோ சொன்னதை நம்பி வார்த்தைகளை இறைத்துவிட்டு, பிறகு மறுத்தால் அடுத்தவன் பிள்ளையை தனதென்று சொந்தம் கொண்டாடி, வளர்ந்த பிறகு "முகச்சாடை" வெளிப்பட்டு மாட்டுவது போல தான்.

தளபதி அவர்கள் மீது மஞ்சள் பத்திரிக்கைகளும், நாலாந்தரப் பேச்சாளர்களும் ஆதாரமில்லாமல் பேசி அதை மக்கள் தூக்கி எறிந்து, தளபதி அவர்களை தாங்கிப் பிடிப்பது தான் வரலாறு. சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக, எதிர்கட்சித் தலைவராக தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்கள் மக்கள். நாளைய முதல்வர் அவர் தான் என்பதும் திண்ணம். அது தான் மக்கள் எண்ணம்.
இது புரியாமல், மீண்டும் மாஃபா பாண்டியராஜன், பாலியல் குற்றச்சாட்டு அது, இது என்று ஆரம்பித்தால் கடைசியாக ஒரு கேள்வி தான் கேட்க வேண்டி இருக்கும்.
"உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் இனிஷியல் தான் போடுகிறீர்கள். ஆனால், உங்கள் உடல் மொழியை பார்த்தால், சந்தேகம் வருகிறது. உங்கள் பிள்ளைகளின் தந்தை யார் ?" எனக் கேட்க அதிக நேரமாகாது.
ஜாக்கிரதை மிஸ்டர் மாஃபா பாண்டியராஜன் !
- எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக