வெள்ளி, 15 நவம்பர், 2019

உச்ச நீதிமன்றத்தின் ஊழல் .. ..பிரசாந்த் பூஷன்

Prashant Bhushan · SC today dismissed review petitions in Rafale. However Joseph J has said that our complaint makes out a serious case&FIR should have been registered&investigation done by CBI. But because PC Act was changed to require govt permission,that must be taken. Why is CBI not seeking it?
சாவித்திரி கண்ணன் : உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் ஊழல்களை, ஊழலுக்கும்,அதிகாரத்திற்கும் துணை போகும் நீதிபதிகளை தொடர்ந்து விமர்சித்து வருபவர் பிரசாந்த் பூசன்!
’’ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. ஆனால்,அதை உச்ச நீதிமன்றம் விசாரித்து பாரபட்சமின்றி உறுதி செய்யும் என்று நாம் நம்பிவிட முடியாது . ஏனெனில் உச்ச நீதிமன்றத்திலும் ஊழல் உள்ளது“ என்று முன்பே கருத்து தெரிவித்திருந்தார் பிரசாந்த் பூசன்!
இப்போதும் 526 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்க வேண்டிய போர் விமானங்களை ரூபாய் 1670 கோடி கொடுத்து ஏன் வாங்கினார்கள் என்பதற்கு போதிய விளக்கம் கிடைக்கவில்லை.
பிரசாந்த் பூசன் போன்ற ஒரு சிலராவது இருப்பதால் தான் ஜனநாயகத்தின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது.

உச்ச நீதிமன்ற அலுவலகத்தை தகவல் உரிமை சட்ட வரம்புக்குள் கொண்டு வர ,சுபாஷ் சந்திர அகர்வாலுடன் இணைந்து தொடர்ந்து சுமார் பத்தாண்டுகளாகப் போராடி,தற்போது அதில் ஒரளவு முன்னேற்றம் வந்துள்ளது.
இது போதாது,இன்னும் நீதிபதிகளின் நியமனம் அல்லது தேர்ந்தெடுக்கப்படும் வழிமுறை வெளிப்படைத் தன்மையாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு தொடர்ந்து அழுத்தம் தந்து கொண்டே இருக்க வேண்டும்.
முதலில், நீதிதுறையில் இருப்பவர்கள் யாரானாலும் சரி, வக்கீலோ, நீதிபதியோ தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்,சட்டமோ,போலீசோ...,தங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என்று நினைக்கும் போக்கிலிருந்து விடுபட வேண்டும்!
தங்களுக்கு கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவத்தையும், மரியாதையையும் நீதித் துறையில் உள்ளவர்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்று தான் மக்கள் எதிர்பார்ப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக