ஞாயிறு, 17 நவம்பர், 2019

இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்த கோத்தபய ராஜபக்ச...!

அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்றதாக அறிவித்த கோத்தபய ராஜபக்ச...!tamil.news18.com Updated: November 17, 2019, 9:38: இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், தான் வெற்றி பெற்றதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் 35 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச-வுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசா-வுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.< வாக்கு எண்ணிக்கை நேற்று தொடங்கிய நிலையில், தமிழர்கள் பகுதியில் சஜித் பிரேமதாசா அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார். அதேபோல, சிங்களவர்கள் பகுதியில் கோத்தபய அதிக ஓட்டுகளை பெற்றிருந்தார்.
/> யார் வெற்றி என்று தேர்தல் ஆணையம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தான் வெற்றி பெற்றுள்ளதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
அவரது கட்சி கொண்டாட்டங்களில் ஈடுபட தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.


இலங்கை அதிபர் தேர்தல் முறை எப்படி?

இலங்கை அதிபர் தேர்தலில் வாக்காளர்கள் இரண்டு கருத்துகளை தெரிவிக்க முடியும். அதிபர் பதவிக்கு தங்களின் முதன்மை தேர்வு யார் என்றும், அதற்கு அடுத்த முக்கியத்துவம் யாருக்கு என்றும் வாக்காளர்கள் குறிப்பிட வேண்டும். மொத்த வாக்குகளில் 50 விழுக்காடுக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவரே அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

ஒருவேளை யாருக்கும் 50 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குகள் கிடைக்காத பட்சத்தில், முதல் 3 இடத்தில் உள்ள வேட்பாளர்களுக்கு, வாக்காளர்கள் அளித்துள்ள இரண்டாவது வாக்குகள் அவர்களுக்கு வழங்கப்படும்.  ஆனால் இதுவரை இரண்டாவது முன்னுரிமை வாக்குகளை எண்ணும் நிலை இலங்கையில் ஏற்பட்டது இல்லை.

இலங்கையைப் பொறுத்தவரை அதிபர், நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம் ஆகிய 3 அதிகார மையங்களில் அதிபர் பதவியே அதிக அதிகாரம் கொண்டதாகும். அவரே உச்சநீதிமன்ற நீதிபதிகளையும், நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவரை பிரதமராகவும் நியமிக்கிறார். அதேநேரத்தில், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.,க்கள் இணைந்து வாக்களித்தால், அதிபரை பதவிநீக்கம் செய்ய முடியும்.

அதிபர் தேர்தலில் சஜித் பிரேமதாசா வெற்றி பெறும் நிலையில், நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசே, அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை கோத்தபய ராஜபக்ச வெற்றிபெற்றால், நாடாளுமன்றத்தில் சிறிய கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மை பெற்று தனக்கான அரசை உருவாக்க முயற்சிப்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக