ஞாயிறு, 17 நவம்பர், 2019

சித்தார்த்துக்கு குரல் கொடுத்த சிவகார்த்திகேயன் ... ரிபெல் ரவி அனுபவங்கள் ....

Rebel Ravi : ஸ்ரீதர்... 
நான் உரையாடல் எழுதிய மொழிமாற்றப் படம்..நல்ல பேர்
வாங்கித்தந்தது..என் நண்பன் சதீஷ் தயாரிப்பாளர்.
இதில் சித்தார்த்துக்குக் குரல் கொடுக்க ஒருவரைக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார் சதீஷ்.
அவர் ஏதோ டி வியில் ஷோ செய்பவர் என்றார்.
நான் அப்போது மும்பையில் வசித்து வந்தேன். டிவி எல்லாம் பார்க்க மாட்டேன்.
எனவே அவரை எனக்குத் தெரியவில்லை. மரியாதையாக நடந்து கொண்டார்.
ஏதோ ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதாகவும் சொன்னார்.
அவருக்குத் தெலுங்கு லிப்புக்குத் தமிழில் சிங்க் செய்து பேச வரவில்லை.
நான் போயிடறேன் சார்..வேற யாரனா வச்சிப் பண்ணிக்கோங்க என்றார்.
நான் அவரிடம் சொன்னேன்...
சித்தார்த் சிறந்த நடிகர்..நீங்கள் அவருக்காக டப்பிங் பேசுகையில் அவரைப் போலவே எக்ஸ்பிரஸ் செய்வீர்..அது உங்கள் நடிப்புக் கேரியரில் உதவும் என்று கூறி ஒரு வரி பேச விட்டு விடியோ எடுத்துக் காண்பித்தேன்.
அவர்..அரை மனதோடு ஒப்புக்கொண்டார்.
இரண்டு மூன்று நாள்களில். உற்சாகமாகப் பேசி முடித்தார்.


சார் நடிப்பு பத்தி நெறய கத்துக்கிட்டேன்..தேங்ஸ் சார் என்றார்.நான் பிரபுதேவாவின் நெருங்கிய நண்பன் என்பதை அறிந்து..நான் சாரின் ரசிகன் என்றார்..யார்தான் அவரது ரசிகர் இல்லை எனச் சிரித்துக்கொண்டே சொன்னேன்.
எளிமையான உணவு தான் வரும்.ராதாரவி டப்பிங் தேட்டரில்..ஒரு குடில் போன்ற இடத்தில் உட்கார்ந்து சாப்பிடுவோம்..அப்போது நிறைய பேசினார்.
அவரது தந்தை சிறிய வயதில் இறந்து விட்டார்..அன்னை வளர்த்து ஆளாக்கினார் என்றும் கூறினார்.
விடை பெறுகையில் என் எண்ணை வாங்கிக் கொண்டு கீப் இன் டச் சார் என்றார்.
நான் அம்மாவப் பாத்துக்கோங்க என்றேன்.
படம் வெளியான போது மும்பையில் ரவுடி ரத்தோர் இறுதிக்கட்டப் பணியில் இருந்தேன்.
படம் நன்றாகப் போனதாம்..
படத்தில் சித்தார்த்துக்குக் குரல் கொடுத்த தம்பி..அடுத்தடுத்துப் படங்களில் நடித்து..பெரிய ஸ்டார் ஆனார்..
அவர்...சிவகார்த்திகேயன்.
ரெபெல்ரவி
17/11/19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக