ஞாயிறு, 17 நவம்பர், 2019

மார்ச்சில் விற்றுவிடுவோம்: நிர்மலா சீதாராமன்.. பாரத் பெற்றோலியம் ,ஏர் இந்தியா ஆகியவை ..

Muralidharan Pb : · அடுத்த மூடு விழா யாருக்கு?
தொலை தொடர்பு நிறுவனங்கள் 1.42 லட்சம் கோடி ஒன்றிய அரசுக்கு நிலுவையாம்.
 5000 கோடிகள் நட்டத்தில் இயங்கும் வோடஃபோனா?
18000 பேரை விஆர்எஸ் கொடுக்க வைத்த பிஎஸ்என்எலா?
போகிற போக்கை பார்த்தால் இனி பழைய படி கடிதம், தந்தி தான் போலிருக்கு. எல்லாவற்றையும் பழகிக்க வேண்டும்.
மார்ச்சில் விற்றுவிடுவோம்: நிர்மலா சீதாராமன்மின்னம்பலம் : கடந்த சில ஆண்டுகளாக இழப்பைச் சந்தித்துவரும் ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (நவம்பர் 17) டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், வரும் மார்ச் மாதத்துக்குள் ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்கள் விற்கப்படும் என்று தெரிவித்துள்ளார்,
இதன் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக முதலீட்டாளர்களிடம் இருந்து தெளிவான பதில் வராமல் இருந்ததால் நஷ்டத்திலிருந்த நிறுவனத்தை விற்க முடியாமல் போனது . ஆனால் தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க சர்வதேச முதலீட்டாளர்களிடையே தற்போது ஆர்வம் அதிகமாக உள்ளது. என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார மந்த நிலையை மாற்ற அரசு சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து வருகிறது. பல துறைகள் சரிவு நிலையிலிருந்து தற்போது மீண்டு வந்துள்ளது. தொழில் துறையினர் பலர் புதிய முதலீடுகளுக்குத் திட்டமிட்டுள்ளனர். சில துறைகளில் விற்பனை அதிகமாகியுள்ளதால் இந்த நிதி ஆண்டிலேயே ஜிஎஸ்டி வசூல் உயரும். விழாக் காலங்களை முன்னிட்டு வங்கிகள் மூலம் ரூ.1.8 லட்சம் கடன் வழங்கப்பட்டது, நுகர்வோர்களின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக