சனி, 2 நவம்பர், 2019

பிரதமர் மோடி தாய்லாந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் பதிப்பை வெளியிட்டார்

தினத்தந்தி :பாங்காங், பிரதமர் நரேந்திர மோடி தாய்லாந்து நாட்டில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் தாய்லாந்து சென்றடைந்தார். அங்கு அந்நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில் சென்றிறங்கிய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து, நட்சத்திர ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தாய்லாந்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு மொழியில், மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் பதிப்பினை இன்று வெளியிட்டு உள்ளார். இதேபோன்று இந்த நிகழ்ச்சியில் சீக்கிய மதகுருவான குரு நானக் தேவின் 550வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அதனை குறிக்கும் வகையிலான நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக