சனி, 23 நவம்பர், 2019

ராஜீவ்காந்தி படுகொலையின் பின்பு திமுக மீது கொடூர தாக்குதல்கள் ... நெடுமாறன்கள் மீது துரும்பு கூட படவில்லை .. பார்ப்பனீய எடுபிடிகள்

வளன்பிச்சை வளன்-பதிவு - 162 : 
ஈழவிடுதலை வரலாற்றில் தமிழகத்தில் திமுக வின் பங்களிப்பு
அளப்பரியது. அதே நேரத்தில் ஈழவிடுதலை ஆதரவு, புலிகள் ஆதரவு நிலைப்பாட்டில் திமுக சந்தித்த சோதனைகள் இழப்புகள் ஏராளம். ராஜீவ் படுகொலையயை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக வினர் சொத்துக்கள் சேதப் படுத்தப் பட்டன. தி.மு.க குறிவைத்து ஈழ விடுதலை, புலிகள் ஆதரவை காரணம் காட்டி தாக்குதல் நடந்த போது இந்த புலிவேசக்காரர்கள் கண்டனமே ஒரு அனுதாபமோ தெரிவிக்க வில்லை ஏனெனில் இவர்களது நோக்கம் ஈழவிடுதலையோ புலிகள் ஆதரவை வழுப்படுத்தும் நோக்கமோ அன்று. தி.மு.க மீது வன்ம மான தாக்குதல் நடத்தும் அளவிற்கு தி.மு.க எதிர்ப்பே பிரதான காரணம்.
இந்த புலிவேசக்காரர்கள் மீது எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பது வரலாறு உணர்த்தும் உண்மை.
இந்திய அமைதிப்படை
இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி செய்து கொண்ட ஒப்பந்தப்படி இலங்கை சென்றது இந்திய அமைதிப் படை. இலங்கையில பிரேமதாசா அதிபரானதும் இலங்கை இறையாண்மை க்கு இழுக்கு என இந்திய அமைதிப் படையை வெளியேற நிர்பந்திக்க. ராஜீவ் அதை ஏற்று 30 03 1990 க்குள் வெளியேற முடிவெடுத்த நிலையில். இந்தியாவில் ஆட்சி மாற்றம் வி பி சிங் பிரதமர் திமுக சார்பில் முரசொலி மாறன் மத்திய அமைச்சர். இச்சூழலில் இந்திய அமைதிப் படையின் கடைசி அணி 30 03 1990 ல் இலங்கையில் இருந்து வெளியேறி சென்னை வந்த போது அப்போது தமிழக முதல்வராக இருந்த திமுக தலைவர் கருணாநிதி சம்பிரதாயப் படி அமைதிப் படையை வரவேற்க செல்லவில்லை. அதற்கு அவர் "எனது தமிழ் மக்களை கொன்று விட்டு வரும் ராணுவத்தை நான் வரவேற்க மாட்டேன்" என தெரிவித்ததை தொடர்ந்து ஈழ விடுதலை எதிர்பாளர்களால் இது ஒரு பெரும் குற்றம் என விமர்சிக்கப் பட்டது.

இந்திய அமைதிப் படையுடன் ஈபிஆர்எல்எஃப், இன்டிஎல்எஃப் குழுவினர் வந்த போது அவர்களை சென்னையில் தங்க அன்றைய திமுக அரசும் தமிழக முதல்வர் கருணாநிதியும் அனுமதிக்காததை தொடர்ந்து அவர்களை வி பி சிங் அரசு ஒடிசாவில் தங்க வைத்தது.
அன்றைய தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி டெல்லியில் வி பி சிங் இல்லத்தில் கட்டியிருந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஈழ பிரச்சனையை விவாதித்து கொண்டிருந்த போது ரகசியமாக ஒடிசாவில் இருந்து சென்னை வந்த பத்மநாபா புலிகளால் கொல்லப் பட்டார் உடன் 18 பேரும் கொல்லப்பட ஈழ விடுதலை எதிர்பாளர்கள் ஆர்பரிக்க துவங்கினர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் திமுக அரசு பதவி விலக கோரினார். தா. பாண்டியன் "சட்டம் ஒழுங்கை பாதுகாக்க தவறிய திமுக அரசு மீது மத்திய அரசு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்". பஜக சார்பில் "கன்னத்தில் அன்றையப் பட்ட அறை" என கிருஷ்ணமூர்த்தி கூறினார். ஜெயலலிதாவோ திமுக அரசு கலைக்கப்பட வேண்டும் என்று ஒலமிட்டார்.
ஊடகங்கள் விசத்தை கக்கின. திணமணி" புலிகளிடம் நட்பு காட்டிய தமிழக அரசு பிற இயக்கங்களை சென்னையில இறங்க விடாமல் ஒடிசாவிற்கு அனுப்பியது இந்திய இராணுவத்தை எதிர்த்தவர்கள் புலிகள் என முதல்வர் புகழ்ந்து பேசினார்
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈபிஆர்எல்எஃப், இன்டிஎல்எஃப் இயக்கங்களை அனுமதி க்காமல் மத்திய அரசை கட்டாயப்படுத்தி ஒடிசா அனுப்பினார். "என வசை பாடித்தீர்த்தன.
இந்த சூழலிலும் புலி வேசக்காரர்கள் அந்த இயக்கங்களுக்கு அனுமதி மறுத்து புலிகளை சென்னையில் அனுமதித்தை ஆதரித்து ஒரு அறிக்கை கூட வெளியிட வில்லை இதை அவர்கள் திமுக விமர்சனமாக பார்த்தனர். புலிகள் ஆதரவு இங்கே இவர்களிடம் கேள்வி குறியானது.
இதை சாக்கிட்டு திமுக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈழ விடுதலை எதிர்பாளர்கள் முயன்றனர். மத்தியில் ஆட்சி மாற்றம் சந்திர சேகர் பிரதமர் சுப்ரமணியன் சுவாமி சட்ட அமைச்சர். ஆர். வெங்கட்ராமன் குடியரசு தலைவர். தி.மு.க ஆட்சி கலைப்பு சிமிக்கையாக குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் சென்னை வந்தார். ஈழ விடுதலை எதிர்பாளர்கள் ஒன்று கூடி புலிகளை கட்டுப்படுத்த திமுக ஆட்சி தவறிவிட்டதாக ஆளுநர் இடம் மனு அளித்தனர் அதிமுக நெடுஞ்செழியன், தமிழக காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்றனர். ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று திமுக ஆட்சி ஜனவரி 30, 1991 ல் கலைக்கப் பட்டது.
திமுக ஆட்சி கலைக்கப் பட்டதற்கு சொல்லப் பட்ட காரணங்கள் "இலங்கையை தாயகமாகக் கொண்டதும் தமிழீழம் எனும் தனிநாடு காண ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி வரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் நாட்டில் தங்களுக்கு என்று சில பகுதிகளில் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்டு சுதந்திரமாக அனுமதித்தாகவும் எதிர் காலத்தில் தமிழக அரசையே பலகீனப் படுத்த கூடிய அந்த இயக்கத்தின நடவடிக்கைகளை தவறிவிட்டதாகவும் தமிழக திமுக அரசு மீது குற்றஞ்சாட்டப் பட்டிருந்தது., இப்படி புலிகள் விரோத அறிக்கைகள் வந்த போதும் இதை கண்டித்து அறிக்கை வெளியிட இந்த புலிவேசக்காரர்களுக்கு தோன்ற வில்லை.
திமுக ஆட்சி கலைப்பிற்கு பிறகு டெல்லி சென்ற ஜெயலலிதா விடுதலைப் புலிகள் பற்றி "உரிய நேரத்தில் தனியார் படையாக பயன் படுத்தி கொள்ளும் நோக்கில் கருணாநிதி விடுதலைப் புலிகளை ஊக்குவித்தார் எனபேட்டி அளித்தார். விடுதலைப் புலிகளை திமுக வின் பிரைவேட் ஆர்மி என கொச்சை படுத்திய போதும் இந்த புலிவேசக்காரர்களுக்கு ரோசம் வராதது ஆச்சரியம் ஏதும் இல்லை இவர்களுக்கு புலிகள் மீது எந்த பற்றும் கிடையாது என்பதையே இது உறுதிப் படுத்துகிறது.
1991 மே 21 ல் ராஜீவ் கொல்லப்பட்ட உடன் இதை சாக்கிட்டு திமுக மீது கடும் தாக்குதல் நடைபெற்றது ராஜீவ் மீது அனுதாபம் இருந்தால், புலிகள் மீது கோபம் இருந்தால் அவர்கள் கோபம் இந்த புலி வேசக்காரர்கள் மீதல்லவா இருந்திருக்க வேண்டும் அவர்கள் மீது ஓரு துண்டு காகிதம் கூட வசப்பட வில்லை ஒரு சிறு சேதம் கூட இந்த புலி வேசக்காரர்கள் க்கு இல்லை ஈழ விடுதலை எதிர்பாளர்கள் திமுக வையே அழிக்க நினைத்தனர். இவ்வளவு பெரிய இழப்பை புலிகளை காரணம் காட்டி திமுக சந்தித்த போதும். இந்த புலிவேசக்காரர்களிடம் இருந்து கண்டனமோ, அனுதாபமோ தெரிவிக்கப் படவில்லை. அவர்கள் புலிகளை நேசித்தால் தானே கண்டனம் தெரிவிப்பார்கள்.
1993 ல் ஈழம் சிவக்கிறது என்ற இந்திய அமைதிப் பற்றிய நூலை நெடுமாறன் வெளியிட்டார். அவர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவரது இந்த நூல் பறிமுதல் செய்யப் பட்டது. எனினும் தடாவில் கைது என்றாலும் ஒரே மாதத்தில் பிணை கிடைத்து வெளியே வந்தார் அந்த அளவிற்கு மென்மை போக்கை அரசு இவரது இந்திய பார்பணீய விசுவாசத்திற்கு பரிசாக வழங்கியது. இந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மாவீரன் செவிட்டு ஊமையானர் வாய் ஏதும் திறக்கவில்லை.
திமுக அரசு 2006 ல் ஜெயலலிதா தொடர்ந்த வழக்கினை வாபஸ் பெற்றதும் நினைவு கூறத்தக்கது. எனினும் ஜெயலலிதா வை ஈழத்தாய் என அழைத்து பேரின்பம் கண்டவர்கள் தான் இந்த புலி வேசக்காரர்கள்.
தொடரும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக