வெள்ளி, 22 நவம்பர், 2019

சுதந்திரமடைந்த 72 ஆண்டுகளில் தான் இந்தியா அதிகமாக கொள்ளை ... அன்னியரை விட அதிக அநியாயம் .

சாவித்திரி கண்ணன் : இந்த நாட்டை கிரேக்கர்கள்
வந்து ஆட்சி செய்தார்கள்!
முகலாயர்கள் வந்து ஆட்சி செய்தார்கள்!
பிரிட்டிஷார், போர்ச்சுகீசியர்கள், பிரெஞ்சுகாரர்கள்..
என பலதரப்பட்ட வெளி நாட்டவர்கள் ஆட்சி செய்துள்ளனர்..அடிமைப்படுத்தியுள்ளனர்....,கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்...!
அப்போதும் கூட இந்த நாடு ஒன்றும் ஓட்டாண்டியாகிவிடவில்லை! இனி மீளவே வழியில்லை என்ற நிலை முன் எப்போதும் ஏற்படவில்லை.ஆம்,ஏற்பட்டதேயில்லை!
ஆனால்,சுதந்திரமடைந்த இந்த 72 ஆண்டுகளில் தான் முன்னெப்போதையும் விட இந்த நாடு அதிகமாக சுரண்டப்பட்டுள்ளது.
இனி மீளவே வழியில்லையோ என்று அச்சப்படும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்!
ஏனெனில்,முன்பு நாட்டை அடிமைபடுத்தி ஆட்சி செய்தவர்களால் நம்மிடமிருந்து பொன்னையும்,பொருளையும்,தானியங்களையும் தான் கொள்ளையிட்டுச் செல்ல முடிந்தது.

நம் கலாச்சாரத்தையோ,இயற்கை வளத்தையோ அவர்களால் ஓரளவுக்கு மேல் துடைத்துச் செல்லவோ,அழிக்கவோ முடியவில்லை.
ஆனால், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவை சூறையாட அவர்கள் போட்ட திட்டம் தான் பசுமை புரட்சி! உண்மையில் அது பசுமை சூறையாடலே!
ஆம்! அந்த பசுமை புரட்டு தான் இன்றைக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த நிலங்களில் மூன்றில் ஒரு பாகத்தை தரிசாக்கி , நிலவளத்தை ஒன்றுமில்லாமல் சூறையாடிவிட்டது!
செலவில்லாமல் நடந்து கொண்டிருந்த தற்சார்பு விவசாயத்தை மாற்றி.., அவர்களிடம் விதைகள்,உரங்கள்,பூச்சி கொள்ளி,களை கொள்ளி ஆகியவற்றுக்கெல்லாம் ஆண்டுதோறும் பல லட்சம் கோடி கொட்டி அழவேண்டிய துர்பாக்கிய நிலைமையை ஏற்படுத்திவிட்டது.
இந்தியாவின் அன்றாட உணவுத் தேவை என்பது அயல் நாட்டிலிருந்து பல லட்சம் கோடி செலவழித்து வாங்கப்படும் நச்சுக்களை நம்பித் தான் உள்ளது என்பதும் அதன் மூலம் நமது நிலவளமும்,உடல் நலனும் நாளும் சூறையாடப்பட்டு வருகிறது என்பதும் எவ்வளவு அவலம்......!
அத்துடன் இந்த நிலைமை இன்னும் ஒரு ஐம்பது வருடம் தொடருமேயானால்..ஒட்டுமொத்த இந்திய நிலங்களும்,மக்கள் உடல் நலனும் உழைக்கும் திறனும் நிச்சயம் எதற்கும் லாயக்கற்றுப் போய்விடும்...!
இந்த நிலைமை தொடர நாம் இனிமேலும் அனுமதிக்கத் தான் வேண்டுமா?
நமது பழைய இயற்கை வளத்தை மீட்க என்ன செய்யப் போகிறோம்...? என்பதே இன்றைய பிரதான கேள்வி!
குறிப்பு; இந்த இரு புகைப்படங்களும் எனது’ உழவர் குரல்’ நூலை படித்த தோழர் ராஜேஸ்வரி அவர்கள் தன் நண்பர்களை இணைத்து கூட்டுப் பண்ணை விவசாயம் செய்வது எப்படி என்பதை கேட்பதற்காக என்னையும், நண்பர் அன்னை வயல் மதன் அவர்களையும் அழைத்து பேச வைத்த போது எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக