திங்கள், 18 நவம்பர், 2019

ஐ ஐ டி பாத்திமா மரணம் ..நாளுமன்றத்தில் கனிமொழி : குற்றவாளிகள் மீது இன்னும் எப் ஐ ஆர் பதியவில்லை .. யாரை காப்பாற்ற முயற்சி? வீடியோ

ஐ.ஐ.டி நியூஸ்.18.com : மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரின் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். மோடி தலைமையில் அமைந்த இரண்டாவது முறையாக அமைந்த பா.ஜ.க அரசின் முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர். மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, ‘கடந்த 10 வருடங்களில் ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களில் 52 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 72 வழக்குகளில் சாதிப் பாகுபாடு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவமானகரமான ஒன்று. அங்கே என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள். பல்வேறு உறுதிமொழிகளுடன் பாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி படிக்கச் சென்றுள்ளார். மர்மமான சூழ்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி தற்கொலை செய்து கொண்ட அறைக்கு பெற்றோர்கள் செல்வதற்கு முன்னதாக ஒட்டுமொத்த அறையும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கயிறும் அகற்றப்பட்டுள்ளது என்று மாணவியின் பெற்றோர்
குற்றம்சாட்டியுள்ளனர். அவருடைய மொபைல்போனில் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. #IITMadras போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 52 தற்கொலைகள் பற்றியும்,அக்கல்வி நிறுவனங்களில் சாதி,மத பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கக்கூடாது என்பதைக் குறித்தும்,தற்கொலை செய்து கொண்ட பாத்திமாவுக்கு நீதி வேண்டியும் இன்றைய பாராளுமன்ற கூட்டத்தொடரில் பேசினேன் pic.twitter.com/JD05djdbTU Ad Sponsored by MGID India's Top Investment Plans for NRIs — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) November 18, 2019 இதுவரையில் ஒருவர் கூட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மாணவி பெயர் குறிப்பிட்ட பேராசிரியர் கூட கைது செய்யப்பட்டவில்லை. யாரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. இன்னமும் எவ்வளவு பாகுபாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஐ.ஐ.டி இதுபோன்ற சூழலில் செயல்படக் கூடாது’என்று காட்டமாகத் தெரிவித்தார் யாரைக் காப்பாற்ற முயற்சி நடக்கிறது! பாத்திமா லத்தீப் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் கனிமொழி!
மாணவி தற்கொலை செய்து கொண்ட அறைக்கு பெற்றோர்கள் செல்வதற்கு முன்னதாக ஒட்டுமொத்த அறையும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கயிறும் அகற்றப்பட்டுள்ளது என்று மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர் - கனிமொழி கனிமொழி >ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரின் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். > மோடி தலைமையில் அமைந்த இரண்டாவது முறையாக அமைந்த பா.ஜ.க அரசின் முதல் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய கூட்டத்தில் தமிழக எம்.பிக்கள் தமிழ்நாட்டின் பிரச்னைகள் குறித்து கேள்விகளை எழுப்பினர்.

மக்களவையில் பேசிய தி.மு.க எம்.பி கனிமொழி, ‘கடந்த 10 வருடங்களில் ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களில் 52 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 72 வழக்குகளில் சாதிப் பாகுபாடு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அவமானகரமான ஒன்று. அங்கே என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள்.
பல்வேறு உறுதிமொழிகளுடன் பாத்திமா லத்தீப் ஐ.ஐ.டி படிக்கச் சென்றுள்ளார். மர்மமான சூழ்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி தற்கொலை செய்து கொண்ட அறைக்கு பெற்றோர்கள் செல்வதற்கு முன்னதாக ஒட்டுமொத்த அறையும் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கயிறும் அகற்றப்பட்டுள்ளது என்று மாணவியின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். அவருடைய மொபைல்போனில் குறிப்பிடப்பட்டிருந்த பேராசிரியரின் மீது வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.


இதுவரையில் ஒருவர் கூட கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மாணவி பெயர் குறிப்பிட்ட பேராசிரியர் கூட கைது செய்யப்பட்டவில்லை. யாரைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. இன்னமும் எவ்வளவு பாகுபாடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும். மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஐ.ஐ.டி இதுபோன்ற சூழலில் செயல்படக் கூடாது’என்று காட்டமாகத் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக