வெள்ளி, 22 நவம்பர், 2019

வைரமுத்துவை திட்ட கூறி.. கெட்ட வார்த்தையை சொல்லி தந்தார் நித்தியானந்தா.. வீடியோ ... மீண்டுவந்த பெண் பேட்டி

Hemavandhana -tamil.oneindia.com:    பெங்களூரூ: "எனக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளை சொல்லி தந்து, வைரமுத்துவை திட்ட சொன்னதே நித்யானந்தாதான்" என்று ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். 
பெங்களூரை சேர்ந்தவர் ஜனார்த்தனா ஷர்மா. இவர் கடந்த 2013-ல் பெங்களூரிலுள்ள நித்தியானந்தாவுக்குச் சொந்தமான பெங்களூரு கல்வி நிறுவனத்தில் 7 முதல் 15 வயதுடைய 3 மகள்களை கொண்டுபோய் சேர்த்தார். அதில் 2 பேர் மட்டும் அஹமதாபாத் ஆசிரமத்துக்கு இடமாற்றப்பட்டனர். இது அறிந்த ஷர்மா, போலீசார் உதவியுடன் ஒரு மகளை மீட்டுவிட்டார். ஆனால், இன்னும் 2 மகள்கள் நித்யானந்தா ஆசிரமத்தில் அடைந்து வைத்துள்ளதாகவும், மூத்த மகள்கள் லோகமுத்ரா, நந்திதாவை மீட்டு தர வேண்டும் என்றும் சொல்லி, கோர்ட் வாசலில் ஏறி இறங்கி வருகிறார்.  இப்போது ஷர்மா மீட்டு கொண்டு வந்த, 3 பெண்களில் ஒருவரை பற்றின செய்திதான் இது. 
இந்த பெண்தான், ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, வைரமுத்துவை திட்டி தீர்த்தவர். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து மன்னிப்பு கேட்டுவிட்டாலும், நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து சிறுமிகள் வைரமுத்துவை திட்டி அந்த சமயத்தில் வீடியோ வெளியிட்டிருந்தனர். 
மிக மோசமான, கொச்சையான வார்த்தைகளுடன் அந்த வீடியோவில் அந்த பெண் பேசியிருந்தார். தலையை வெட்டணும் தலையை வெட்டணும் "வே.. மகன், உங்க அம்மா வே.., தலையை வெட்டணும்" என்றெல்லாம் அந்த சிறுமி வைரமுத்துவை திட்டி தீர்த்திருந்ததால், இந்த வீடியோ படுவைரலானது. பலரும் இந்த சிறுமியின் பேச்சை கண்டு அதிர்ந்தனர். அதிலும் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் கொதித்தெழுந்துவிட்டார். 
கர்நாடக மாநில டிஜிபியிடம் புகார் ஒன்றை அளித்தார்.
"ஆசிரமத்தில் சிறுவர், சிறுமிகளுக்கு ஆபாச வார்த்தைகள் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர்களது வயதுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் துளியும் சம்பந்தமில்லை. 
முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இதுபோன்று பேச முடியுமா? என்று கேட்டு, மத பிரச்சனைகளை தூண்டுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டிருந்தது நினைவிருக்கலாம். 
இப்போது, வைரமுத்துவை திட்டிய இந்த பெண், நித்தியானந்தா ஆசிரமம் குறித்து, ஒரு பிரபல டிவி சேனலுக்கு பேட்டி தந்துள்ளார். அதில் அந்த பெண் முகத்தை துணியால் மறைத்தபடி பேசி உள்ளார். அவர் சொல்லி உள்ளதாவது: "ஆண்டாள் விவகாரம் எழுந்தபோது, கவிஞர் வைரமுத்துவை திட்ட சொல்லி கொடுத்ததே நித்யானந்தாதான்.. அதுவும் கெட்ட வார்த்தைகளைதான் சொல்லி தந்ததே நித்யானந்தாதான்" என்று புது குண்டை தூக்கி போட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக