செவ்வாய், 5 நவம்பர், 2019

சிவசேனாவுக்கு ஆதரவளிக்க சோனியா மறுப்பு ... மகாராஷ்டிரா ..

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் ஒப்புதல் சரத்பவார்- சோனியா tamil.oneindia.com : காங்.- என்சிபியை மலை போல் நம்பிய சிவசேனா.. ஆதரவு அளிக்க சோனியா மறுப்பு? டெல்லி: மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதை ஏற்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்துவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் பாஜக 105 இடங்களும், சிவசேனா 56 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) 54 இடங்களும் காங்கிரஸ் 44 இடங்களும் பெற்றன. எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
தனிப்பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை. கூட்டணி கட்சிகளான சிவசேனாவும் பாஜகவும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் போட்டி போட்டு கொண்டு மோதல் போக்கில் உள்ளன.
இந்த நிலையில் சிவசேனா கட்சி தலைவர்கள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிடம் ஆதரவை பெற முயற்சித்து வந்தன. இதில் இரு கட்சிகளும் ஆதரவு தருவதாக ஒப்புக் கொண்டதாக சிவசேனா தெரிவித்து வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசனை நடத்த டெல்லியில் சோனியா காந்தியை என்சிபி தலைவர் சரத் பவார் சந்தித்து பேசினார். அப்போது என்ன பேசினார்கள் என்பது குறித்து தெரியவில்லை.

போதிய ஆதரவு இல்லை
சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த சரத்பவாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் சேனா- பாஜக இடையே உள்ள மோதல் அவர்களது உள்விவகாரமாகும். சிவசேனா எங்களுக்கு எந்தவித உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க எங்களிடம் போதிய பெரும்பான்மை இல்லை. எனவே எதிர்க்கட்சி வரிசையில் அமர தயார் என தெரிவித்தார்.

 பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் இந்த நிலையில் சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பதை சோனியா காந்தி நாசுக்காக சரத்பவாரிடம் மறுத்துவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உறுதிப்படுத்தப்படாத தகவல் கிடைத்துள்ளதால் இனி என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக