திங்கள், 18 நவம்பர், 2019

வேலூர் பத்திரிகையாளரை வீதியில் அடித்து துவைத்த வி சி க குண்டர்கள்

கண்டனங்கள் ஆன்மீக நம்பிக்கை திருமாவை விமர்சித்தவர்.. நடுரோட்டில்.. அடித்து உதைத்து சட்டையை கிழித்த விசிக.. வெலவெலத்த வேலூர்! tamil.oneindia.com - hemavandhana : திருமாவை விமர்சித்தவரை அடித்து உதைத்து சட்டையை கிழித்த விசிக
கொலை மிரட்டல் விடுதலை சிறுத்தையினர் வேலூர்: "நடுரோட்டிலேயே பத்திரிகை ஆசிரியரின் சட்டையை கிழித்து... சரமாரியாக அடித்து நொறுக்கி உள்ளனர் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள்.. இதனால் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
"சனாதன கல்வியை வேரறுப்போம்" என்ற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில், அக்கட்சி தலைவர் திருமாவளவன் பேசியபோது, "அசிங்கமாக சிலைகள் இருந்தால் அது இந்து கோவில்கள்" என்று தெரிவித்திருந்தார்.
திருமாவளவனின் இந்த பேச்சு இந்து மதத்தை கேவலப்படுத்தும் விதமாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்தும்படியாக உள்ளதாகவும் சொல்லி, தங்கள் அதிர்ச்சியையும்,கோபத்தையும் வெளிப்படுத்தியும் வருகின்றனர்.
 ஆன்மீக நம்பிக்கை மேலும் இந்துமதத்தையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் அவதூறு, ஏளனம் செய்து பேசி வரும் திருமாவளவனின் பேச்சினை கண்டிக்கும் பொருட்டு, இந்து மத நம்பிக்கையாளர்கள் பல்வேறு வகையில் சோஷியல் மீடியாவில் தங்கள் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.. மற்றும் சிலர் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை கொடுத்தபடியே உள்ளனர்.
விடுதலை சிறுத்தையினர் இந்நிலையில் ராணிப்பேட்டையில் "கலைஞர் பாதை" என்ற பத்திரிகையை நடத்தி வருபவர் குணசேகரன் என்பவர். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேரந்தவராம். தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், திருமாவளவனுக்கு எதிராக ஒரு பதிவு ஒன்றை பதிந்துள்ளார். கட்சியில் இருந்து கொண்டே இப்படி எதிரான கருத்தை போடுவதா என்று, அந்த பகுதி விசிக நிர்வாகிகளே கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.

கொலை மிரட்டல் முத்துகடை பகுதியில் குணசேகரன் சென்று கொண்டிருந்தபோது, மாவட்ட செயலாளர் குண்டா(எ)சார்லஸ், காரை.தமிழ்,மற்றும் நிர்வாகிகள் சிலர், அவரை வழிமறித்து குண்டர்களை வைத்து சரமாரியாக தாக்கி உள்ளனர். நடுரோட்டில் மிருகத்தனமாக அடித்து உதைத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். இதில் சட்டை கிழிந்து.. பலத்த காயமடைந்தார் குணசேகரன்!

கண்டனங்கள் கருத்துப்பதிவை கருத்துப்பதிவால் எதிர்நோக்காமல் இப்படி ஒரு பத்திரிகை ஆசிரியரை நடுரோட்டில் நாயை அடிப்பது போல அடிக்கலாமா என்றும், இதுதான் அணுகுமுறையா என்றும் இதற்கு கண்டனங்கள் எழ தொடங்கி உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக