வியாழன், 21 நவம்பர், 2019

இலங்கை புதிய பிரதமராக பதவி ஏற்றார் மகிந்தா ராஜபக்சே

Mahinda Rajapaksa sworn in as new Prime Minister of Srilanka tamil.oneindia.com - mathivanan-maran : கொழும்பு: இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே இன்று பதவியேற்றார். அவருக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் கோத்தபாய ராஜபக்சே. இதனையடுத்து மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து தமது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே அறிவித்தார்.
இதனையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்க வருமாறு எதிர்க்கட்சித் தலைவரான மகிந்த ராஜபக்சேவை, கோத்தபாய அழைத்திருந்தார். இந்நிலையில் இன்று முற்பகல் கோத்தபாய ராஜபக்சேவை நேரில் சந்தித்து தமது பதவி விலகல் கடிதத்தை ரணில் கொடுத்தார்.
இதன்பின்னர் இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றார். இலங்கையின் பிரதமராக 3-வது முறையாக மகிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார்.
அவருக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்சேவுக்கு பிரதமர் மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதற்கு மகிந்த ராஜபக்சேவும் நன்றி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக