திங்கள், 25 நவம்பர், 2019

நாட்டின் 99% மக்கள் விரோத பிரச்சினைகளுக்குக் காரணம் பார்ப்பான், பார்ப்பனியம் .. சமுக வலையில் கடும் காரம்

Don_Ashok - டான் அசோக் : நாங்கள் ஏன் நாட்டின் 99% மக்கள் விரோத
பிரச்சினைகளுக்குக் காரணம் பார்ப்பான், பார்ப்பனியம் எனத் திட்டுகிறோம், தலையில் அடித்துக்கொள்கிறோம்? "இவய்ங்களுக்கு வேற வேலையே இல்ல, எல்லாத்துக்கும் இவய்ங்களுக்கு பார்ப்பனர்கள சொல்லலேனா தூக்கம் வராது" என உங்களில் நிறைய பேருக்குத் தோன்றும்.
சுவாதி என ஒரு பெண் கொலையானபோது நாமெல்லாம் எவ்வளவு பதறினோம்? அவளை வெட்டிய உண்மையான கொலையாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என எவ்வளவு துடித்தோம்? நம்மில் யாராவது ஒருவர் சுவாதியைக் குறை சொன்னோமா? சுவாதி வேலைக்குப் போயிருக்க கூடாது என்றோ, வீட்டில் இருந்திருக்கலாம் என்றோ, ஏன் காதலித்தார் என்றோ, ஏன் ஒரு ஆணுடன் பேசினார் என்றோ அவர்மேல் ஏதாவது ஒரு கோணத்தையாவது திருப்பினோமா? இல்லை. நம் அத்தனை பேரின் கோபமும் சுவாதி கொலைகாரர்களின் மீது இருந்தது. சுவாதி கொலையானதற்கான காரணங்களின் மீது இருந்தது. அதுதான் நாம். நிற்க.
உலகில் எந்த கல்வி நிலைத்திலும் இல்லாத அளவு ஐ.ஐ.டியில் பிற்படுத்தப்பட்ட/தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காலம்காலமாக இது அங்கே நடக்கிறது.
அங்கு படித்தவர்களும், பணியாற்றியவர்களும் ஐ.ஐ.டியில் அதிகாரத்திலிருக்கும் பார்ப்பனர்கள் எப்படியெல்லாம் பிற சாதி/மத மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்குவார்கள், எப்படி அவர்களுக்கு தொடர் மன அழுத்தத்தைக் கொடுத்து தற்கொலைக்குத் தள்ளுவார்கள் என பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் ஐ.ஐ.டி நிர்வாகம் எனும் முழுக்க முழுக்க பார்ப்பன நிர்வாகம் என்ன செய்கிறது? மாணவர்களின் அறைகளில் உள்ள ஃபேனில் ஸ்பிரிங் (spring) மாட்டுகிறது!! இதுதான் தடுப்பு நடவடிக்கையாம்!! "நீ சாவதாக இருந்தால் தாராளமாகச் செத்துப்போ. ஆனால் இங்கே சாகாதே," என்பதுதான் இதன் நோக்கம்! எவ்வளவு திமிரும், கொழுப்பும், அதிகாரமும் இருந்தால் இதைச் செய்வார்கள்?
என்றாவது நாம் சுவாதிக்கு வருந்தியதைப் போல இவர்கள் அனிதாவுக்கோ, வெமுலாவுக்கோ, சரவணனுக்கோ, ஃபாத்திமாவுக்கோ வருந்தியிருக்கிறார்களா? மாறாக அவர்கள் மரணத்தை கேலிப்பொருளாக அல்லவா ஆக்குகிறார்கள். நமக்கெல்லாம் கொஞ்சமாவது சொரணை வர வேண்டாமா?
உலகில் எந்த ஆதிக்க வர்க்கமாவது இவ்வளவு சாடிசத் தன்மையோடு நடந்துகொண்டிருக்கிறதா? நான் ஒன்றை உறுதியாகச் சொல்கிறேன். அவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்குதான் நம்மைவிட அதிகாரம் அதிகம். அவர்கள் நேரடியாக ஆட்சி செய்யாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள்தான் நம்மை ஆள்கிறார்கள். இந்த நாட்டில் ஒரு மோசமான நோய் இருக்கிறதென்றால், இந்த நாட்டின் வளர்ச்சியை, மனித உரிமையை, சமூகநீதியை ஒரு வைரஸ் உள்ளிருந்தே தின்று தீர்க்கிறது என்றால் அது பார்ப்பனியம்தான். பார்ப்பனியம் மட்டும்தான்.
-டான் அசோக்
நவம்பர் 25, 2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக