வெள்ளி, 15 நவம்பர், 2019

அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம் 2014ல் வெறும் 79 லட்சம்... 2019ல் 119 கோடி.. அசுர வளர்ச்சி ..

Muralidharan Pb : ஒரு இந்தியக் குடிமகன் தொழில் தொடங்கி நடத்தினால் 3 வருடங்களில் லாபம் பார்க்கலாம் என்பது சராசரி நிலைமை.
அதுவே வளர்ந்து வரும் ஒரு துறையில் கொஞ்சம் வேகம் கூடும். முதலாண்டிலேயே 100% லாபம் வரலாம்.
குசும் ஃபின்சேர்வ் என்பது அமித் ஷா மகன் ஜெய் ஷா நிறுவனம். அந்நிறுவனம் 2014ல் வெறும் 79 லட்சம் வணிகம் செய்தது. அது 2019ல் அசுர வளர்ச்சி பெற்று 119 கோடி ஆனது. மிகக் குறிப்பாக 15000 % லாபம் என்பது super exorbitant அதீத அளவுக்கடந்ந எண்ணிக்கை. கடத்தல் அல்லது கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டால் தான் இது சாத்தியம். கள்ளப் பணம் இருக்க வாய்ப்பில்லை. காரணம் நமது பிரதமர் மோடிஜி 2016ல் அதை ஒழித்துவிட்டார்.
அப்போ எப்படி இது சாத்தியம்?
மிகவும் கவனிக்கப்படவேண்டிய செய்தி என்னவெனில் இந்த 5 ஆண்டுகளில் 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக வருமான வரி விவரங்களை சமர்ப்பிக்கவில்லை.
LLP என வகைபடுத்தப்பட்ட நிறுவனமானது அக்டோபர் 30க்குள் ஆண்டு தோறும் கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பது கம்பெனிகளின் சட்டம்.
2017, 2018 ஆண்டுகளில் அவை சரியான நேரத்தில் அந்த நிறுவனத்தால் வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகே இது சமர்ப்பிக்கப்பட்டது.

மிகவும் கவனத்துடன் அணுகி பார்த்தால் இதில் அறியப்பட வேண்டிய இன்னொரு தில்லு முல்லு இதில் உண்டு.
2016ல் பணமதிப்பிழப்பு நடந்தபோது நிறைய ஷெல் கம்பெனிகள் நாட்டில் ஒழிக்கப்பட்டது என்று பெருமை பீற்றி கொள்வது பாஜக மற்றும் சங்கிகளின் வாடிக்கை. உள்ளபடியே இதை வருமான வரித்துறை மற்றும் கம்பெனிகளின் துறையே செய்ய வேண்டிய ஒரு வேலை. பணமதிப்பிழப்புக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
டம்மியான, இயங்காத 2,26,000 ஷெல் கம்பெனிகளின் மீது நடவடிக்கை எடுத்து குசும் ஃபின்சேர்வு நிறுவனத்துக்கு மட்டும் தொழிலில் நட்டம் காரணங்காட்டி சலுகை கொடுத்து விட்டு, இப்போது தாறுமாறாக கணக்கு காட்டியுள்ளதை காங்கிரஸ் கட்சி வரும் குளிர் கால கூட்டத்தொடரில் எழுப்பப்போகிறதாம்.
பாஜக எல்லா வழிகளிலும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி வருவதற்கு இது ஒரு சான்று.
https://thelogicalindian.com/news/amit-shah-son/…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக