ஞாயிறு, 10 நவம்பர், 2019

அமெரிக்கா ..'எச்-1 பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா வழங்க அனுமதி இல்லை" - அமெரிக்க நீதிமன்றம்


தந்தி டிவி : 'எச்-1 பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா வழங்க தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு அந்த நாடு 'எச்-1 பி விசா வழங்கி வருகிறது. இது முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் தற்போதைய அதிபர் டிரம்ப், 'எச்-1 பி விசா வழங்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், 'எச்-1 பி' ஊழியர்களின் மனைவிக்கு விசா வழங்க அமெரிக்க நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக