வெள்ளி, 1 நவம்பர், 2019

சென்னை – யாழ்ப்பாணம் 10 ஆம் திகதி முதல் தினசரி , திருச்சி யாழ் வாரத்துக்கு மூன்று சேவைகள்

வீரகேசரி :யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், சென்னை சர்வதேச
விமான நிலையத்துக்கிடையிலான வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த விமான சேவையானது தினசரி விமான சேவையாக இடம்பெறவுள்ளதுடன் பயண நேரமானது 32 முதல் 50 நிமிடங்களுக்குள் இருக்கும். டிக்கெட் முன்பதிவு முகவர் மூலம் விமானங்களின் அந்தந்த வலைத்தளங்களிலிருந்து மக்கள் தங்கள் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம், யாழ்ப்பாணத்தின் கீழ் உள்ள தூதரக பொது அலுவலகத்தில் இருந்து இதற்கான விசா அனுமதியினை பெற்றுக் கொள்ளவும் முடியும். இதவேளை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்துக்கிடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக