வியாழன், 7 நவம்பர், 2019

பேரறிவாளனுக்கு மீண்டும் 1 மாதம் சிறை விடுப்பு .. தமிழக அரசு அறிவிப்பு

Rajiv Gandhi Murder: Perarivalan gets 1-month parol from Monday tamil.oneindia.com - shyamsundar : சென்னை: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார், பேரறிவாளன். சிறு வயதிலேயே கைது செய்யப்பட்ட இவர், பல ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவரது தூக்கு தண்டனை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. அவரது விடுதலைக்காக அவரின் தாய் அற்புதமம்மாள் போராடி வருகிறார்.
இந்த நிலையில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாத கால பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலத்தைக் காரணம் கட்டி பரோல் கேட்கப்பட்டது.

குயில்தாசன் உடல் நிலை மோசமானதால் சிகிச்சை பெற்று வருகிறார். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு மூலம் பேரறிவாளனுக்கு இந்தப் பரோல் வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனுக்கு வழங்கப்படும் இரண்டாவது பரோல் இது. இதற்கு முன் கடந்த 2017-ம் ஆண்டு பேரறிவாளனுக்கு இரண்டு மாத பரோல் வழங்கப்பட்டிருந்தது.
திங்கட்கிழமை நவம்பர் 11-ம் தேதி முதல் பேரறிவாளனின் ஒரு மாத கால பரோல் தொடங்குகிறது. திங்கள் அன்று காலை இவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக