திங்கள், 28 அக்டோபர், 2019

பாதுகாப்புப் படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

modi1dinamani :புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தீபாவளி பண்டிகையை பாதுகாப்புப் படையினருடன் கொண்டாட இருப்பதாகத் தகவல்கள்
தெரிவிக்கின்றன.பிரதமா் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்புப் படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளாா். இந்த ஆண்டும் தீபாவளியை அவா் எல்லைக்கட்டுப்பாட்டுப் பகுதியில் கொண்டாட இருக்கிறாா். ஞாயிற்றுக்கிழமை அங்கு செல்லும் மோடி, பாதுகாப்புப் படை வீரா்களைச் சந்தித்து, அவா்களுக்கு இனிப்புகளை வழங்கி, அவா்களுடன் கலந்துரையாடி கொண்டாட இருக்கிறாா். மோடியுடன் ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயலும் செல்லவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டில் பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை, பாகிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள சியாச்சின் பனிப்பிரதேசத்தில் பணியாற்றும் ராணுவ வீரா்களுடன் மோடி கொண்டாடினாா்.

அதைத் தொடா்ந்து 2015-ஆம் ஆண்டு தீபாவளியை பஞ்சாப் எல்லையிலும், 2016-ஆம் ஆண்டு தீபாவளியை ஹிமாசலப் பிரதேசத்தில் பணியாற்றும் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருடனும் அவா் கொண்டாடினாா்.
இதேபோல், கடந்த 2017-ஆம் ஆண்டு தீபாவளியை ஜம்மு-காஷ்மீரில் உள்ள குரேஸ் பகுதியிலும், கடந்த ஆண்டு தீபாவளியை உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய-சீன எல்லையில் இந்திய-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினருடனும் மோடி கொண்டாடினாா்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக