திங்கள், 7 அக்டோபர், 2019

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை பெற்றது மத்திய அரசு

கோப்பு படம்
மாலைமலர் : சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர் பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லி: சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் பராமரிக்கப்படும் இந்தியர்களின் கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்ள அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, செயல்பாட்டில் உள்ள கணக்கு விவரங்கள் மற்றும் கடந்த 2018-ம் ஆண்டில் முடித்துவைக்கப்பட்டுள்ள கணக்குகளின் விவரங்களின் முதல் பட்டியலை சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவிடம் வழங்கியுள்ளது. 
 மேலும், சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்கள் தொடர்பான இரண்டாவது பட்டியல் அடுத்த ஆண்டு செப்டம்பர் வழங்கப்பட உள்ளது.
சுவிட்சர்லாந்து அரசு இந்தியா உள்பட 75 நாடுகளுடன் சுவிஸ் வங்கி தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின் படி சுமார் 31 லட்சம் நபர்களின் வங்கி தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக