திங்கள், 7 அக்டோபர், 2019

பெண்களின் முகநூல் பதிவுகளுக்கு அதிக லைக் கிடைப்பது? ... உண்மை என்ன?

Devi Somasundaram : என் கிட்ட இன்பாக்ஸ்ல ஒரு நண்பர் ஒரு கவிதை தந்து உன் பேஜ்ல போடு நிறைய லைக் விழும்...நான் போட்டா ஒருத்தன் லைக் போட
மாட்டான் .பெண் ஐடின்றதால லைக் போடுவாஙகன்னு சொன்னார் .
அவர் கிட்ட நான் சொன்னது .
முதல்ல நான் காப்பி அடிக்க மாட்டேன் .அடுத்தவர் படைப்புக்கு என் பேர் போட்டு பாராட்டு வாங்க எனக்கு அவசியமில்ல .
சிந்திக்கத் தெரியாதவர் தான் காப்பி அடிப்பார்கள் .அதனால தான் நான் மீம்லாம் போடறதில்ல .அதுவே என் வரையில் இன்னொருவர் படைப்ப காப்பி அடிப்பது தான் .
அதனால உங்க கவிதைய என் கவிதைன்னு என் போஸ்ட்ல போட மாட்டேன் .

ரெண்டாவது நான் fake id ந்னு சொல்லப் படுவது தான் அதிகம்.நான் பொண்ணா ஆணான்னே தேடாம என் நட்பில் இருப்பவரே அதிகம்..நான் கேர்ல் ஐடின்னு நினைத்து லைக் போடுவதா இருந்தா அவர்கள் எல்லா கேர்ல் ஐடிக்கும் லைக் போட்டு இருக்கனும் .
என் பேஜ்ல ஆண்கள், பெண்கள், வயதானவர்கள், எல்லாரும் கமண்ட் போடுவார்கள் .. ஆண்கள் மட்டுமா லைக், கமண்ட் போடுகிறார் .. அவர்கள் பெண் ஐடின்னா போடுகிறார்கள்.
நான் எல்லா ஐடியும் பாத்துட்டு தான் இருக்கேன் .எல்லா கேர்ல் ஐடிக்கும் எல்லாரும் லைக் ,கமண்ட் போடுவதில்லை .
குறைந்தபட்சம் நம் பதிவில் கமண்ட் செய்பவர மதிக்கனும் .அவர் யார் என்ன கொள்கை, என்ன மதம்னுலாம் தேடாம ஒரு சக மனிதரா மதிச்சு ரிப்ளை செய்யனும் . அவர்கள் ஒன்னும் வெட்டியா லைக் போடல .நாம பேசிவதில் அர்த்தம் இருந்தா தான் லைக் போடுவார்கள் .
அதோட எளிமையா எல்லார்க்கும் புரியற மொழில பேசனும் .நான் தான் பெரிய அறிவாளின்னு நம்பிட்டு கமண்ட் போடுபவரை அலட்சியமா நடத்தினா யாரும் கமண்ட் போட மாட்டாங்க .
நமக்கு அறிவும் ,திறமையும் அதிகமாய்ட்டா அடக்கமும் பணிவும் வேணும்..

.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
வள்ளுவன் சொன்னது . வயல்ல இருக்கும் நெல் செடி கதிர் இல்லாம சும்மா இருக்கும் போது நிமிர்ந்து யாருக்கும் வணங்காம நிற்கும்...அதே செடி நிறைய கதிர் விட்டு நெல் விளைந்தா வளைந்து குனிந்து நிற்கும்.
மனிதர்கள் தன்னிடம் செல்வமும் வசதியும் அறிவும் அதிகமாகும் போது பணிவோட இருக்கனும் . அதுவே செல்வம் இல்லாம ஏழ்மைல இருக்கும் போது யாருக்கும் பணியாம நிமிர்ந்து இருக்கனும் .
நாம நம்ம கிட்ட அறிவு இருக்குன்னு யாரையும் மதிக்காம கமண்ட் போடுபவர்க்கு ரிப்ளை கூட செய்யாம இருந்தா அவர்கள் தேடி வந்து அவமானப் படுவார்களா ? ..போன்னு போய்ட்டே தான் இருப்பார்கள் .
நாம சொல்வது எளிமையா புரியும் படி இருந்து, நாம அவர்கள மதித்து ரிப்ளை செய்தா எந்த ஐடி ஆணா பெண்ணான்னு பார்க்காம லைக் போடுவார்கள் .
எனக்கு தான் எல்லாம் தெரியும்னு திமிரா சுத்தினா ஒருத்தர் லைக் போட மாட்டார் ..
இப்டியே பொலம்பிட்டு தான் சுற்றனும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக