சனி, 26 அக்டோபர், 2019

சேரி பாஷை (தமிழ்) பேசாதே என்று அடிக்கும் வட இந்திய ஆசிரியை பிரதிக்சா தஞ்சாவூர் ..சோழன்மாளிகையில்

;திருத்தவத்துறை : தமிழ்நாட்டுப் பள்ளியில் தமிழ் பேசினால் அடிக்கும்
வடஇந்திய ஆசிரியர்.
தமிழைத் தாழ்ந்தமொழி என்றும் தமிழர்களைத் தங்கள் ஊரில் அடித்து உதைத்ததாகவும் மாணவர்களிடம் கூறிய ஆசிரியை மற்றும் அதற்குத் துணை நிற்கும் தலைமை நிர்வாகியையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்க.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சோழன்மாளிகையில் டாக்டர்.சி.எசு.கல்யாணசுந்தரம் நினைவுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பிரதிக்சா என்னும் வடஇந்தியப்பெண் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார், இவர் ஏழாம் வகுப்பிற்கு பாடம் எடுக்கும் போது, தமிழ் ஒரு சேரிமொழி என்றும் தமிழ்மொழி பேசும் தமிழர்களை தங்கள் ஊரில்(போபால்) குச்சியால் அடித்துத் துரத்தி விரட்டியடிப்போம் என்றும் கூறி தமிழில் பேசும் மாணவர்களுக்கு தண்டமும் விதித்துள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூற, பெற்றோர் பள்ளியின் சி.இ.ஒ வாகப் பணியாற்றும் கர்நாடகவைச் சேர்ந்த முரளிராவிடம் புகார் அளித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த முரளிராவ் சி.இ.ஓ வாகப் பதவியேற்ற பின்தான் அதிக அளவில் தகுதியற்ற வடநாட்டு ஆசிரியைகளை நியமித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை பிரதிக்சா எவ்விதப் பணி அனுபவமும் இல்லாத போதிலும் அவருக்கு ரூபாய் 45,000 மாதச்சம்பளத்துடன் ஆசிரியைகளை வழிநடத்தும் பொறுப்பிலும் உள்ளார்,

தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழையும், தமிழரையும் தரக்குறைவாகப் பேசிய ஆசிரியை பிரதிக்சாவையும் அதிக அளவில் வட மாநிலங்களிலிருந்து தகுதி இல்லாத ஆசிரியைகளைப் பணியில் அமர்த்தும் கர்நாடகத்தை சேர்ந்த முரளிராவையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்... கீழேயுள்ள தொலைபேசி எண்ணில் பள்ளி நிர்வாகத்தினரைத் தொடர்பு கொண்டு மேற்கண்ட நிகழ்விற்குக் கண்டனத்தையும், தொடர்புடையவர்களைப் பணிநீக்கம் செய்யவும் வலியுறுத்துவோம்.
பதிவு: கிழவன்
தொலைபேசி எண்கள்: 04352417691, 04352417692

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக