ஞாயிறு, 13 அக்டோபர், 2019

முத்தம் தர வந்த மனைவியின் . நாக்கை அறுத்து கீழே போட்ட கணவன்... குஜராத் அகமதாபாத்

husband bites off wifs tongue tamil.oneindia.com -hemavandhana.: அகமதாபாத்: நம்ம புருஷன்தானே.. ஒன்னும் நினைச்சுக்க மாட்டாரு என்று நினைத்து ஆசையாக முத்தம் தர கிட்ட வந்தார் மனைவி. கடுப்பில் இருந்த புருஷனோ, கத்தியை எடுத்து மனைவியின் நாக்கை அறுத்து கீழே போட்டுவிட்டார்!
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தம்பதி அன்சாரி - தஸ்லீம்.
அன்சாரிக்கு வேலை வெட்டியே கிடையாது. எங்குமே போகாமல் ஊரை வெட்டியாக சுற்றி வந்துள்ளார். இது தஸ்லீமாவுக்கு ஆத்திரத்தை தந்தது. இதனால் தம்பதிக்குள் தினமும் சண்டையும், தகராறுமாக நடந்து வந்தது.
இந்நிலையில், இருவருக்குள்ளும் வழக்கம்போல சண்டை வந்துள்ளது. வேலைவெட்டிக்கு போகாத கணவனை, தஸ்லிமா சரமாரியாக கேள்வி கேட்டுவிட்டார். இதில் கோபித்து கொண்டு போய் உட்கார்ந்து கொண்டார் கணவர்.

இதை கவனித்த தஸ்லிமா, ரொம்ப திட்டிட்டோமே.. சமாதானப்படுத்தலாமே என்று நினைத்து கணவனுக்கு பக்கத்தில் சென்று முத்தம் தர முயன்றார். ஏற்கனவே செம எரிச்சலில் இருந்த அன்சாரி, மனைவியின் நாக்கை பிடித்து இழுத்து, அருகில் இருந்த கத்தியால் நாக்கை அறுத்துவிட்டார். நாக்கு துண்டாக கீழே போய் விழுந்தது. இதை கொஞ்சமும் எதிர்பாராத தஸ்லிமா, வலியால் கதறி துடித்தார்.
ரத்தம் சொட்ட சொட்ட அலறிய தஸ்லிமா, அப்படியே செல்போனை எடுத்து, தன்னுடைய தங்கைக்கு வீடியோ கால் செய்தார். எதுவும் பேச முடியாமல் ரத்தம் வழிந்து வீடியோவில் நிற்பதை கண்ட அந்த தங்கையும் விரைந்து வந்து, தஸ்லீமாவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
இப்போது தஸ்லிமாவுக்கு துண்டிக்கப்பட்ட நாக்கு இணைக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து அன்சாரியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்டதுக்கு, நாக்கையே புடுங்கி எறிந்த கணவனின் செயலால் அகமதாபாத் அலறி கிடக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக