புதன், 30 அக்டோபர், 2019

மருத்துவர்கள் போராட்டம் ஒத்தி வைப்பு .. பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு மருத்துவர் சங்கம் அறிவிப்பு

மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு : அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு மருத்துவர் சங்கம் அறிவிப்புmaalaimalar.com மருத்துவர்கள் போராட்டம் தள்ளிவைப்பு : அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் தமிழ்நாடு மருத்துவர் சங்கம் அறிவிப்பு அமைச்சர் விஜயபாஸ்கருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில் போராட்டத்தை தள்ளிவைப்பதாக தமிழ்நாடு மருத்துவர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சென்னை: அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ப ஊதியம் வழங்க வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தரவேண்டும், மேற்படிப்பு அரசு மருத்துவ மாணவர்களுக்கு பணியிட கலந்தாய்வு வெளிப்படையாக நடத்த வேண்டும் ஆகிய 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்னும் 2 வாரங்களில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்துள்ளார். இதனால் போராட்டத்தை தள்ளிவைக்கிறோம்  என்று தமிழ்நாடு மருத்துவர் சங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-

அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும். மருத்துவர்கள் உடலை வருத்திக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், போராட்டத்தில்  ஈடுபட்டவர்கள் பணிக்கு உடனே திரும்ப வேண்டும் என மருத்துவர்களுக்கு  அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக