புதன், 30 அக்டோபர், 2019

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6 பேர் உயிரிழப்பு

இன்றைய நிலநடுக்கத்தில் இடிந்த வீடுபிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 6 பேர் உயிரிழப்புமாலைமலர் : பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் தீவை இன்று தாக்கிய 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மணிலா: புவியியல் அமைப்பின்படி பசிபிக் பெருங்கடலையொட்டி, அடிக்கடி நிலநடுக்கங்களை சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டானாவ் தீவில் (உள்ளூர் நேரப்படி) இன்று காலை 8.12 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுக்கோலில் 5.8 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒரு நிமிடம் வரை நீடித்ததால் வீடு மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்த மக்கள் உயிர் பயத்தில் மக்கள் ஓட்டம் பிடித்து தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.
இன்றைய நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள் மற்றும் ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. பள்ளியில் இருந்து தப்பிச்செல்ல முயன்ற ஒரு சிறுவன் மீது சுவர் இடிந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். 5 மாணவர்கள் காயமடைந்தனர்.


கோரனாடல் என்ற பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 66 வயது மதிக்கத்தக்க ஒருவர் பலியானார்.

சற்று நேரத்தில் 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் சுமார் 100 பேர் காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக