திங்கள், 21 அக்டோபர், 2019

இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது

tamilnadu assembly by election poll start now நக்கீரன் -ா. சந்தோஷ்  :  தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடங்கியது. நாங்குநேரியில் 299 வாக்குசாவடிகளும், விக்கிரவாண்டியில் 275 வாக்குச்சாவடிகளும், புதுச்சேரி மாநிலம் காமராஜ் நகர் தொகுதியில் 32 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் சரியாக காலை 07.00 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 06.00 மணி வரை நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் அனைத்தும் 24- ஆம் தேதி அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக